1 GB முடிந்துவிட்டதா ? ஹை ஸ்பீடு ஜியோ இணைய சேவை பெற வழிமுறை இதோ...!
ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய சலுகையை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
மாபெரும் சலுகையை வாரி வழங்கிய ஜியோ, ஒரு நாளைக்கு 4 ஜிபி வரை இலவசமாக டேட்டா பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சலுகை வழங்கியது. இதனை தொடர்ந்து , ஜியோவுடன் போட்டி போட முடியாத மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள், ட்ராய் – உடன் முறையிட்டது.
இதனை தொடந்து, தற்போது ஒரு நாளைக்கு 1 ஜி பி வரை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சலுகை வழங்கியது.இந்நிலையில் 1 ஜி பி முடிந்துவிட்டால் இணைய சேவை , குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 1 ஜி பி ஒருநாளைக்கு போதுமானதாக இல்லை என்றால், அதற்கு மேல் பயன்படுத்தும் போது, ஹை ஸ்பீட் இணைய சேவையை பெற , சில வழிமுறைகள் உள்ளன.
301 ரூபாய்க்கான திட்டம் :
6 ஜிபி ( 28 நாட்கள் ). அதாவது ஒரு நாளைக்கு 1 ஜிபி பேக், ரூபாய் 51 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி ரீ சார்ஜ் செய்வது ?
ஜியோ ஆப் ஓபன் பண்ணுங்க ...
1 ஜி பி டேட்டா முடிந்துவிட்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்
ஒரு வேளை 1 ஜிபி டேட்டா முடிந்துவிட்டால், டேட்டா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான அளவு , ஆன்லைன் ரீசார்ஜ் செய்து , ஹை ஸ்பீட் இணைய சேவையை பெறலாம் .