Smartwatch: 10 நாட்கள் பேட்டரி பேக்கப் உடன் கூடிய புது ஸ்மார்ட்வாட்ச்- அதிரடி ஆஃபர்களுடன் இந்தியாவில் அறிமுகம்

manimegalai a   | Asianet News
Published : Nov 23, 2021, 09:40 PM IST
Smartwatch: 10 நாட்கள் பேட்டரி பேக்கப் உடன் கூடிய புது ஸ்மார்ட்வாட்ச்- அதிரடி ஆஃபர்களுடன் இந்தியாவில் அறிமுகம்

சுருக்கம்

புதிய நாய்ஸ் எக்ஸ் ஃபிட்1 ஸ்மார்ட் வாட்சின் அதிகாரப்பூர்வ விற்பனை வருகிற நவம்பர் 26-ந் தேதி முதல் துவங்க இருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது நாய்ஸ். அந்நிறுவனம் தற்போது நாய்ஸ் எக்ஸ் ஃபிட்1 என்கிற ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

இதன் அதிகாரப்பூர்வ விற்பனை வருகிற நவம்பர் 26-ந் தேதி துவங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்சை அமேசான் நிறுவனம் அதன் வலைதளத்தில் பட்டியலிட்டு இருக்கிறது. புதிய நாய்ஸ் எக்ஸ் ஃபிட்1 ஸ்மார்ட் வாட்சில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 

அதன்படி இந்த வாட்ச் செவ்வக வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் மட்டும் ஒரு பட்டன் உள்ளது. இதை அணிந்துகொள்ள ஏதுவாக சிலிகான் ஸ்டிராப் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் எடை வெறும் 30 கிராம் தான். மெட்டல் பினிஷிங் கொண்ட நாய்ஸ் எக்ஸ் பிட் 1 மாடலில் எஸ்.பி.ஓ.2 தொடுதிரை உள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குமாம். இது தண்ணீர் பட்டாலும் எதுவும் ஆகாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.

புதிய நாய்ஸ் எக்ஸ் ஃபிட்1 ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், சிறப்பு ஆஃபரின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. நாய்ஸ் எக்ஸ் ஃபிட்1 ஸ்மார்ட்வாட்ச் சில்வர் மற்றும் பிளாக் மெட்டல் பிரேம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வெள்ளை மற்றும் கருப்பு நிற சிலிகான் ஸ்டிராப்களுடன் கிடைக்கிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!
ஐடி (IT) வேலைக்கு குட் பை.. வெல்டிங், பிளம்பிங் வேலைக்கு மவுசு! ஜென் ஜி இளைஞர்களின் புது ட்ரெண்ட்!