இன்ஸ்டா சார்ஜ் அம்சம் கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கான பிளேபேக் கிடைக்கும்.
இந்திய சந்தையில் முன்னணி அக்சஸரீ உற்பத்தியாளரான நாய்ஸ் நிறுவனம் புதிதாக ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்செட் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நாய்ஸ் நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 35 மணி நேரத்திற்கு பிளே பேக் வழங்குகிறது. இதில் உள்ள ஃபிலெக்சிபில் டிசைன் மற்றும் சவுகரியமான இயர்பட்கள் உணவுத் தரம் மிக்க சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஹெட்செட்டில் இன்ஸ்டா சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டா சார்ஜ் அம்சம் கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கான பிளேபேக் கிடைக்கும். மேலும் இந்த நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலில் என்விரான்மெண்டல் சவுண்ட் ரிடக்ஷன் வசசதி உள்ளது. இது அழைப்புகளை மேற்கொள்ளும் போது தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கிறது.
நாய்ஸ் நெர்வ் ப்ரோ அம்சங்கள்:
- 10 மில்லிமீட்டர் டிரைவர்கள்
- ப்ளூடூத் 5.2
- அழைப்புகளுக்கு என்விரான்மெண்டல் சவுண்ட் ரிடக்ஷன் அம்சம்
- ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX5)
- மேக்னெடிக் இயர்பட்கள்
- வாய்ஸ் அசிஸ்ட்
- கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி சப்போர்ட்
- அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேபேக்
- பாஸ்ட் சார்ஜிங் மூலம் பத்து நிமிட சார்ஜ் செய்து பத்து மணி நேர பிளேபேக் பெறலாம்
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் நெர்வ் ப்ரோ நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடல் சியான் புளூ, ஜெட் பிளாக் மற்றும் நியான் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கவே துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக நாய்ஸ் நெர்வ் ப்ரோ நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.