KTM RC390 : மீண்டும் உற்பத்தி பணிகள் துவங்கி இருப்பதை அடுத்து விரைவில் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
பஜாஜ் நிறுவனம் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பித்து இருக்கிறது. இதை அடுத்து புதிய 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர புதிய தலைமுறை கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் செயல்திறன் 43.5 பி.ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் விண்ணப்ப தரவுகளில் புதிய கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், இதன் இந்திய வெளியீடு மட்டும் உறுதியாகி இருக்கிறது. மேம்பட்ட கே.டி.எம். RC125 மற்றும் RC200 மோட்டார்சைக்கிள் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
2022 கே.டி.எம். RC390 மாடலில் புதிய TFT டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. செமிகண்டக்டர் குறைபாடு காரணமாக புதிய கே.டி.எம். RC390 மாடல் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. TFT டிஸ்ப்ளேவுக்கான தட்டுப்பாடு காரணமாக புதிய கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் மாடலின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் 2022 கே.டி.எம். RC390 உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய TFT பேனல்கள் ஸ்டாக் கிடைத்ததை அடுத்து உற்பத்தி துவங்கியதாக தெரிகிறது. மீண்டும் உற்பத்தி பணிகள் துவங்கி இருப்பதை அடுத்து விரைவில் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய மோட்டார்சைக்கிள் ஏற்கனவே கே.டி.எம். இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு விட்டது.
புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் வெளியீட்டை தொடர்ந்து 2022 RC390 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் ஏற்கவே விற்பனையகம் வரத் துவங்கி விட்டது. இந்திய சந்தையில் புதிய 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் விலை அதன் முந்தைய வேரியண்டை விட அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் கே.டி..எம். RC390 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2 லட்சத்து 77 ஆயிரத்து 635, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.