
புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது எப்போதும் ஒரு உற்சாகமான விஷயம். பெட்டியைத் திறந்ததும், கேமரா குவாலிட்டியைப் பார்ப்பது, புதிய ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வது என நாம் பிஸியாகிவிடுவோம். ஆனால், ஆப்ஸ்களை விட மிக முக்கியமானது உங்கள் போனின் பாதுகாப்பு. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), புதிய போன் வாங்குபவர்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. உங்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கித் தகவல்களைப் பாதுகாக்க நீங்கள் மாற்ற வேண்டிய 5 முக்கிய செட்டிங்ஸ் இதோ:
போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ அதைக் கண்டுபிடிக்க 'Find My Device' (ஆண்ட்ராய்டு) அல்லது 'Find My' (ஐபோன்) வசதி மிகவும் அவசியம். போனை வாங்கிய உடனேயே இந்த செட்டிங் ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் போன் எங்கிருக்கிறது என்பதை வரைபடத்தில் பார்ப்பதுடன், தூரத்தில் இருந்தே போனை ஒலிக்கச் செய்யவும் அல்லது தரவுகளை அழிக்கவும் முடியும்.
நவீன ஸ்மார்ட்போன்களில் இணைய இணைப்பு (Internet) இல்லாவிட்டாலும் கூட போனைத் தேடும் வசதி உள்ளது. 'Offline Finding' வசதியை ஆன் செய்வதன் மூலம், போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அதைக் கண்டறிய வாய்ப்புள்ளது. அதேபோல், திருடப்பட்ட போனை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே லாக் செய்யும் 'Remote Lock' வசதியையும் மறக்காமல் ஆக்டிவேட் செய்யுங்கள்.
நமது போனுக்கு வரும் OTP-க்கள் மற்றும் ரகசிய மெசேஜ்களை லாக் ஸ்கிரீனில் பார்த்தே மற்றவர்களால் தெரிந்துகொள்ள முடியும். இதைத் தவிர்க்க, 'Notifications on Lock Screen' செட்டிங்கிற்குச் சென்று 'Hide Sensitive Content' அல்லது 'Don't show notifications' என்பதைத் தேர்வு செய்யவும். இதன் மூலம் போனை அன்லாக் செய்யாமல் யாரும் உங்கள் மெசேஜ்களைப் படிக்க முடியாது.
திருடர்கள் போனைத் திருடியவுடன் முதலில் செய்வது அதை சுவிட்ச் ஆஃப் செய்வதுதான். ஆனால், Realme, Oppo, OnePlus போன்ற போன்களில் போனை ஆஃப் செய்ய வேண்டுமானால் பாஸ்வேர்டு கேட்கும் வசதி உள்ளது. 'Password to power off' என்ற வசதியை ஆன் செய்து வைப்பதன் மூலம், உங்கள் அனுமதி இல்லாமல் யாராலும் போனை அணைக்க முடியாது. இது போனைத் தேட உங்களுக்கு கூடுதல் நேரம் கொடுக்கும்.
சமீபகாலமாக சிம் ஸ்வாப் (SIM Swap) மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் சிம் கார்டை எடுத்து மற்றொரு போனில் போட்டு OTP பெறாமல் தடுக்க 'SIM Card Lock' வசதியைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறை போனை ரீஸ்டார்ட் செய்யும்போதும் அல்லது சிம்மை மாற்றும்போதும் நீங்கள் அமைத்த PIN நம்பரை உள்ளிட்டால் மட்டுமே சிம் வேலை செய்யும். இது உங்கள் வங்கி கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.