Exclusive : ஜிபிஎஸ்-க்கு(GPS) போட்டியாக வரும் நேவிக்(Navic)! எதிர்காலத்தை ஆளும்! - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

By Dinesh TG  |  First Published Sep 21, 2023, 8:20 PM IST

இந்தியா உருவாக்கியுள்ள நேவிக் தொழில்நுட்பம், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும், அனைத்து துறைகளிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
 


இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஏசியாநெட் நியூஸ் குழுமத்தின் எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ராவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார், அதில், ஜிபிஎஸ் மற்றும் நேவிக் குறித்து பேசுகையில், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் பேசுகையில், ஜிபிஎஸ்-க்கு மாற்றாக நேவிக் தொழில்நுட்பமம் உருவாக்கப்பட்டது. ஜிபிஎஸ் பொதுவாக 20 மீட்டர் வரையிலான துல்லியமான தகவல்களை அளிக்கிறது. அதற்கு மேலும் அளிக்கிறது. ஆனால், நேவிக் 3 மீட்டர் வரை துல்லிய தவகல்களை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஏனெனில் இது நகரும் செயற்கைகோள் கிடையாது. இது நிலையான செயற்கைகோள் தத்துவ அமைப்பை கொண்டது.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்

விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு நம் பாதுகாப்பு அமைப்பு உறுதியாக இல்லாததால் நேவிக் தொழில்நுட்பம் தற்போதைக்கு நிறுத்தப்பட்டது. அனைத்து சூழ்நிலையும் கருத்தில் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பலதரப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆர்மி, நேவி அனைவரது தளவாடங்களுடன் பரிசோதிக்கப்பட்டது. அவை அனைத்தும் GPS ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தளவாடங்கள். அவை ஜிபிஎஸ்-லிருந்து நேவிக்-க்கு மாற்ற பெரிய மற்றும் நீண்ட கால அளவிலான மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஹார்டுவேர் மாற்றம், சாஃப்ட்வேர் மாற்றம் அவை. கண்டிப்பாக ஜிபிஎஸ்-லிருந்து நேவிக் விரைவில் மாற்றப்படும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் ஏசியாநெட் நியூஸ் சேர்மன் ராஜேஷ் கல்ராவின் சிறப்பு நேர்காணல்!!

ஆப்பிள் ஐபோனில் நேவிக் (NaVIC)

அடுத்தது, அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அனைவரும் இதை பயன்படுத்தும் வகையில் இதை எளிதில் கொடுத்துவிட முடியாது. ஏனென்றால் frequency (அதிர்வெண்) பொதுவாக ஜிபிஎஸ் எல்-1 பேண்டு, மற்றம் எல்2 பேண்டு. இவ்விரு பேண்டுகளையும் நாங்கள் மறுத்து வருகிறோம். நேவிக் எஸ் பேண்டு மற்றும் எல் 5 பேண்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

நிலவில் சூரிய வெளிச்சமே படாத தென் துருவப் பகுதியை படம் பிடித்த நாசா விண்கலம்!

இந்த பேண்டுகள் நம் மொபைல்களில் அல்லது கம்ப்யூட்டர்களில் இருப்பது இல்லை. ஒருவேளை நேவிக் பயன்படுத்த விரும்பும்போது அவர்களது மொபைலில் எஸ் பேண்டு மற்றும் எல்5 பேண்டு பொருத்தப்பட வேண்டும். அதற்கான இடஅமைப்பு, ஆண்டெனா அனைத்தும் செய்யப்பட வேண்டும். எனவே, நாம் என்ன முடிவெடுத்தோம் என்றால், எல்1 மற்றும் எல்2 பேண்டுகளை நேவிக்கில் பொருத்தி இப்போது விண்ணிலும் செலுத்தப்பட்டுள்ளது. இது உயர்மட்ட பாதுகாப்பான சமிக்ஞைகளை வழங்கும். கடந்த நேவிக் செயற்கோள் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தொடர்சி விரைவில் செலுத்தப்படும்.

சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் கூட எல்1 பேண்டுடன் கூடிய நேவிக் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி, பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடையும். பஸ் டிராக்கிங், ரயில்வே டிராக்கிங் பெரும் உதவியாக இருக்கும். இது ஏற்கனவே எல்5 பேண்டு மற்றும் எஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி எல்-1 பேண்ட் மிகவும் பிரபலமடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

click me!