Motorola Phone : புத்தம் புது 5G போன்.. இவ்வாண்டு அறிமுகமாகுமா Motorola G64 5G? உத்தேச விலை & ஸ்பெக் இதோ!

By Ansgar R  |  First Published Apr 13, 2024, 12:29 PM IST

Motorola G64 5G Launch : உலக அளவில் பிரபலமான மோட்டோரோலா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் மோட்டோ G04 வெளியீட்டைத் தொடர்ந்து மற்றொரு மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போனைக் கொண்டுவர தயாராகி வருகின்றது. 


சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டோரோலா, தனது புதிய கைபேசியின் வருகையை தனது சமூக ஊடக இடுகையின் மூலம் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல் சில தகவல்களை அளித்துள்ளது. மேலும் வரவிருக்கும் அந்த போன் Moto G64 ஆக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வந்த Moto G54 5Gக்கு மாற்றாக இது இருக்கும். 

இணையத்தில் வெளியான தகவல்களில் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் Moto G64 5Gன் படங்கள் பகிரப்பட்டுள்ளது. மேலும் அந்த புதிய போன் சற்று வளைந்த விளிம்புகளுடன் காணப்படுகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை காண்பிக்கும் படங்களும் அதில் காட்டப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

டேட்டாவை டெலிட் ஆகாமல்.. அப்படியே புது மொபைலுக்கு வாட்ஸ்அப் பேக்அப் செய்வது எப்படி தெரியுமா?

Moto G64 5G ஆனது அதிகபட்சமாக 2.50GHz கடிகார வேகம் கொண்ட ஆக்டா-கோர் சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது என்பதையும் வெளியான பட்டியல் காட்டுகிறது. இந்த சிப்செட் MediaTek Dimensity 7025 SoC என நம்பப்படுகிறது. Moto G54 5G ஆனது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் ஆரம்ப விலை ரூ. 15,999 ஆகா இருந்தது.

ஆகவே மோட்டோ வெளியிடும் இந்த புதிய Motorola G64 5G ஸ்மார்ட் போன், தனது முந்தைய பாதிப்பை விட சற்று விலை கூடுதலாகத்தான் அறிமுகம் செய்யப்படும் என்றும் நம்பப்படுகிறது. ஆகவே மோட்டோரோலா G64 5G 15,000 என்ற விலையை தாண்டித்தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெறும் ரூ.14499க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. உடனே ஆர்டர் பண்ணுங்க.. எப்படி தெரியுமா?

click me!