Motorola : உச்சகட்ட ஸ்பெக்ஸ்.. விரைவில் அறிமுகமாகும் Motorola Edge 50 Ultra.. எப்போது? விலை என்ன? முழு விவரம்!

By Ansgar R  |  First Published Apr 12, 2024, 4:51 PM IST

Motorola Edge 50 Ultra : பிரபல மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அது இவ்வாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Motorola Edge 50 குடும்பத்தை சேர்ந்த புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடக்கவுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா, எட்ஜ் 50 ஃப்யூஷன் மற்றும் எட்ஜ் 50 ப்ரோ ஆகியவை இந்த நிகழ்வில் உலகளாவிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 SoC உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இப்பொது இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போன், 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த கைபேசியானது 165Hz Refresh வீதத்துடன் 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

Vivo Phone : டக்கரான அம்சங்கள்.. பட்ஜெட்டில் அடங்கும் புது போன்.. Vivo அறிமுகம் செய்யும் T3X 5G - விலை என்ன?

மேலும் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா, வரவிருக்கும் எட்ஜ் 50 தொடரில் மிகவும் பிரீமியம் கைபேசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மோட்டோரோலா எட்ஜ்+ 2024 அல்லது எட்ஜ் அல்ட்ரா 2024 மோனிகர் மூலம் அமெரிக்காவில் அறிமுகமாகலாம் மற்றும் இதன் விலை சுமார் 83,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது, அந்த நிறுவனம் செல் போன் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு முதல் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. DynaTAC 8000X என்ற போன் தான், மோட்டோரோலா நிறுவனம் முதல் முதலில் அறிமுகம் செய்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புது ஸ்மார்ட் போன்.. அம்சமான ஸ்டைல் & ஸ்பெக் - இன்று முதல் விற்பனையில் Xiaomi 14 Ultra - விலை என்ன?

click me!