விஞ்ஞானம் வளர வளர, அதே வேகத்தில் நம்மை சுற்றி பல புது புது நோய்களும் வர தொடங்கிவிட்டது காய்ச்சல் வந்தாலே எந்த காய்ச்சலாக இருக்கும் என பல சந்தேகம் எழ தொடங்கி உள்ளது.
அந்த வகையில் மக்களிடையே ஒரு விதமான பயத்தை உண்டாக்கிய காய்ச்சலுக்கான நோய் கிருமிகளில் ஜிகா, டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க ஒரு புதிய மொபைல்ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் படி இந்த ஆப்பை பயன்படுத்தி, வெறும் 3௦ நிமிடத்தில் நோய்களில் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதாவது நோய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு கருவியின் மீது , இந்த மொபைல் ஆப் ஓபன் செய்து வைத்தால் அடுத்த சில நிமிடங்களில் சோதனையின் முடிவை புகைப்படமாக அனுப்பும். அந்த புகைப் படத்தின் நிறத்தை வைத்து, எந்த நோய் நம்மை தாக்கி இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும்
இந்த அறிய கண்டுபிடிப்பை இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் துணையுடன் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .