மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களாக அமேசான், பேஸ்புக் ஆகியவை அண்மையில் தங்கள் ஊழியர்களில் பலரை பணிநீக்கம் செய்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மற்றொரு பெருநிறுவனமான மைக்ரோசாப்ட் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
உலக நாடுகளில் பல பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் சூழலின் எதிரொலியாக பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துவருவதாக கருதப்படுகிறது.
undefined
மைக்ரோசாப் நிறுவனம் எடுத்துள்ள முடிவின்படி அந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு, பொறியியல் பிரிவு முதலிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றி வருபவர்கள் வேலை இழக்க உள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
யூடியூப் மூலம் சம்பாதித்து ஆடி கார் வாங்கிய இளைஞர்
பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாகவும் அதன் மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் நியூஸ் வெளியிட்ட செய்தியில், மைக்ரோசாப் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை.
ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், அக்டோபர் மாதம் சுமார் ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் என ஆக்சியோ அறிக்கை சொல்கிறது.
2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2.21 லட்சம் முழுநேர ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் 1.22 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். 99 ஆயிரம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்து பணியாற்றுகிறார்கள்.
டுவிட்டரா? இன்ஸ்டாகிராமா? வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்! அதிர்ச்சி முடிவுகள்!!