மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கட்! போனஸ் பட்ஜெட்டும் குறைப்பு

By SG Balan  |  First Published May 11, 2023, 7:49 AM IST

கடந்த ஜனவரியில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது முழு நேர ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடையாது எனக் கூறியுள்ளது.


மைக்ரோசாஃப்ட் கார்ப் இந்த ஆண்டு முழுநேர ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்வு வழங்கப்போவதில்லை என்றும் போனஸ் மற்றும் ஸ்டாக் விருதுகளுக்கான பட்ஜெட்டையும் நிறுவனம் குறைக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஊழியர்களுக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி விவரம் அறிய ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சார்பில் தொடர்புகொண்டபோது மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து உடனடியாக பதில் கிடைக்கவில்லை.

Tap to resize

Latest Videos

"கடந்த ஆண்டு, சந்தை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீட்டிற்காக குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்தோம். உலகளாவிய பட்ஜெட்டை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கினோம்" என்று சத்யா நாதெல்லா அனுப்பிய ஈமெயிலில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் iPhone 16 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் கசிந்தது - இதில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

சென்ற ஜனவரியில், மைக்ரோசாப்ட் 10,000 தொழிலாளர்களைக் குறைப்பதாக கூறியது. பொருளாதார மந்தநிலையச் சமாளிக்க தொழில்நுட்பத் துறையில் பல நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மைக்ரோசாப்ட் இப்போது ஜெனரேட்டிவ் AI இல் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் கருதுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை நிதியுதவியாகப் பெற்றுள்ள ChatGPT தயாரிப்பாளரான OpenAI உடன் இணைந்து, மைக்ரோசாப்ட் ஆபிஸ் (MS Office) தயாரிப்புகளிலும் பிங் (Bing) சர்ச் எஞ்சினிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தி வருகிறது.

இனி மெட்ரோ ரயில்களில் டிக்கெட்டுகளை கியூஆர் குறியீடு மூலம் பெறலாம்.. முழு விபரம்

click me!