Micromax note 2 : நான்கு கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

By Nandhini Subramanian  |  First Published Jan 25, 2022, 2:53 PM IST

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 


மைக்ரமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும்  வசதி கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத்  5, யு.எஸ்.பி. டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

Latest Videos

undefined

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 அம்சங்கள்

- 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 4GB ரேம்
- 64GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும்  வசதி 
- 48MP பிரைமரி கேமரா
- 5MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 2MP டெப்த் கேமரா 
- 16MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்
- 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத்  5
- யு.எஸ்.பி. டைப் சி
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5000mAh பேட்டரி
- 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் பிளாக மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன்  ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

click me!