சோனி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு நெக்பேண்ட் ஸ்பீக்கர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சோனி நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கர் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை SRS-NB10 மற்றும் SRS-NS7 என அழைக்கப்படுகின்றன. சோனி SRS-NB10 மாடல் ஆன்லைன் கான்ஃபெரன்ஸ் மற்றும் மீட்டிங்களில் கலந்து கொள்வதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. நெக்பேண்ட்-இல் ஃபுல் ரேன்ஜ் ஸ்பீக்கர் மேல்புறம் பார்த்த நிலையில் பொருத்தப்பட்டுள்ளது.
இத்துடன் பேசிவ் ரேடியேட்டர்கள் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன. SRS-NB10 மாடலில் வாய்ஸ் பிக்கப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இது அழைப்புகளின் போது ஆடியோவை தெளிவாக கேட்க செய்கிறது. இதில் இரண்டு உயர்-ரக டைரெக்ஷனல் மைக்ரோபோன்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கரரில் அட்வான்ஸ்டு ஆடியோ சிக்னல் பிராசஸிங் வசதி உள்ளது.
செக்யூர் ஃபிட், குறைந்த எடையில் உருவாகி இருப்பதால் இந்த நெக்பேண்ட் ஸ்பீக்கர் பயன்படுத்தும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. சோனியின் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கர் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. மேலும் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு தேவையான அளவு சார்ஜ் ஆகிவிடுகிறது. இதில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், IPX-4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
சோனி SRS-NS7 மாடல் டால்பி அட்மோஸ் வசதி கொண்ட உலகின் முதல் வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கர் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. எனினும், சோனி பிரேவியா எக்ஸ்.ஆர். மாடல்களுடன் மட்டுமே இந்த வசதி இயங்கும். இந்த அம்சம் 360 டிகிரி ஸ்பேஷியல் சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது.
டி.வி.யுடன் ஆப்டிக்கல் கேபிள், யு.எஸ்.பி. கேபிள் அல்லது ப்ளூடூத் மூலம் இணைந்து கொள்ளும் வகையில் சோனி வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கர் SRS-NS7 உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 360 ஸ்பேஷியல் சவுண்ட் அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் சோனி 360 ஸ்பேஷியல் சவுண்ட் பெர்சனலைசர் ஸ்மார்ட்போன் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த வசதி WF-1000XM3, WH-1000XM4, WH-XB700, WI-1000XM2 போன்ற மாடல்களில் உள்ளது.
புதிய SRS-NS7 மாடலை முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. அதிக வால்யூம் வைக்கும் போது பேக்கப் நேரம் ஐந்து மணி நேரமாக குறைந்துவிடுகிறது. இதில் குயிக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் யு.எஸ்.பி. டைப் சி, பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. முந்தைய மாடலை போன்றே இதிலும் IPX-4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
விலையை பொருத்தவரை சோனி SRS-NS7 மாடல் ரூ. 22,990 என்றும் SRS-NB10 மாடல் விலை ரூ. 11,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கர்கள் நாடு முழுக்க செயல்பட்டு வரும் சோனி செண்டர், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கிறது.