மெட்டா நிறுவனம் Meta நிறுவனம் தனது மேம்பட்ட AI அம்சமான Meta AI ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய செயலிகளில் Meta AI ஐப் பயன்படுத்த முடியும்.
இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகில் AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒரு கணினி மனிதனை போல யோசித்தால் அல்லது மனிதனை போல செயல்படுவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் AI தளங்களை உருவாக்கி வருகின்றன.
அந்த வகையில் மெட்டா நிறுவனம் Meta நிறுவனம் தனது மேம்பட்ட AI அம்சமான Meta AI ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய செயலிகளில் Meta AI ஐப் பயன்படுத்த முடியும். தினசரி பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு Meta AI உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Llama 3 தொழில்நுட்பத்தால் இது இயக்கப்படுகிறது, Meta AI ஆனது கடந்த ஏப்ரல் முதல் உலகளவில் விரிவடைந்து வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கிறது.
undefined
வாட்ஸ் அப்-ல் எப்படி Meta AI ஐ பயன்படுத்துவது?
Meta AIஐ நேரடியாக அணுக, உங்கள் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்துவிட்டு, பின்னர் அதை திறந்தால் ப்ளூ கலரில் வட்ட ஐகான் இருக்கும். அதனை கிளிக் செய்தால் போதும். Meta AI சேட் திறக்கும். அதில் உங்களுக்கு தேவையான கேள்விகள், தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். எதை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமோ அந்த வார்த்தை டைப் செய்தால் போதும். உதாரணமாக உங்களுக்கு இந்தியாவின் டாப் 10 கல்லூரிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், Top 10 Colleges In India என்று டைப் செய்தால் போதும், அதற்கான பதில் உங்களுக்கு கிடைத்துவிடும்.
சுவாரஸ்யமாக, Meta AI ஆனது "இமேஜின்" என்ற தனித்துவமான அம்சத்தையும் கொண்டுள்ளது, இது பயனர்களை உருவாக்க அனுமதிக்கிறது. மற்றும் அவர்களின் அரட்டைகளில் இருந்து நேரடியாக AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிரவும். Meta AI உடனான உங்கள் தொடர்புகளில் "Imagine" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் சில விஷயங்களைச் உருவாக்கலாம். பிறந்தநாள் விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட அழைப்பிதழ்களை உருவாக்குதல் மற்றும் வீட்டு அலங்கார உத்வேகத்திற்கான மனநிலை பலகைகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
வாட்ஸ் அப் மட்டுமின்றி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றிலும் Meta AI ஆங்கிலத்தில் கிடைக்கும். Meta.ai இணையதளம் மூலமாகவும் இதை அணுகலாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் சாட்போட் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உரை மற்றும் படங்களை உருவாக்கலாம், நீண்ட உரைகளை சுருக்கவும் மற்றும் எழுதும் பணிகளைச் செய்யலாம்.