மாருதி சுசுகி நெக்சா கார் மாடல்களிலும் CNG கிட் வழங்கப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரீமியம் நெக்சா மாடல்களிலும் CNG கிட் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நெக்சா விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் தங்களின் பலேனோ, சியாஸ் போன்ற மாடல்களில் CNG கிட் பொருத்திக் கொள்ளலாம். இதனை மாருசி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மாருதி கட்டமைத்து இருக்கும் நெக்சா பிராண்டின் தரம் CNG கிட் வழங்குவதால் பாதிக்கப்படுமா என்பது குறித்து மாருதி சுசுகி ஆய்வு மேற்கொண்டது. "பிராண்டு மதிப்பு குறையும் என நாங்கள் அதிகம் நம்புகிறோம். இதனால் தான் நெக்சா மாடல்களிலும் CNG வசதியை வழங்க இருக்கிறோம். இதற்கு சரியான நேரம் அமைய காத்திருக்கிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
மாருதி சுசுகியின் போட்டி நிறுவனங்களான ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே தங்களின் உயர் ரக மாடல்களில் CNG கிட் வழங்கி வருகின்றன. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், ஆரா மற்றும் டாடா டியாகோ, டிகோர் போன்ற மாடல்களில் CNG ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் மாடல்களில் CNG கிட் உடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
"தற்போது CNG ஆப்ஷன்கள் குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எங்களின் வாடிக்கையாளர்கள் அளித்து இருக்கும் கருத்துக்களின் அடிப்படையில் எந்த காரின் டாப் எண்ட் மாடலிலும், மைலேஜ் என்பது ஒவ்வொரு இந்திய வாடிக்கையாளருக்கு மிகமுக்கியமான ஒனஅறாக இருக்கிறது. இதனால் மேலும் அதிக வேரியண்ட்களில் CNG வசதியை வழங்க இருக்கிறோம்," என ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ஏற்கனவே எரிபொருள் விலை ரூ. 100-ஐ கடந்துள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இதன் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கார் பயன்படுத்தும் விகராத்தில் வாடிக்கையாளர்கள் முன்பை விட அதிக கவனமுடன் செய்லபட வைத்திருக்கிறது.