ChatGPT: சமையல் கலையிலும் கலக்கிய சாட் ஜிபிடி! ருசித்துச் சாப்பிட்ட இளைஞர்!

By SG Balan  |  First Published Feb 11, 2023, 5:33 PM IST

இளைஞர் ஒருவர் ChatGPT சொல்லிக் கொடுத்த சமையல் குறிப்பைக் கேட்டு ருசியான சீஸ் உருளைக்கிழங்கு செய்து சாப்பிட்டிருக்கிறார்.


சாட் ஜிபிடி (ChatGPT) வேகமாக பிரபலமடைந்து எல்லாவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த சாட்டிங் மென்பொருள், மனிதர்களைப் போல் பேசி, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது.

OpenAI நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சாட் ஜிபிடியிடம் பலர் தங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் பெற முயல்கிறார்கள். இப்போது ஒரு இளைஞர் தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்று சாட் ஜிபிடியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சாட் ஜிபிடி (ChatGPT) அற்புதமாக செய்முறை விளக்கத்துடன் பதில் அளித்துள்ளது.

Latest Videos

undefined

சுபம் ஜோஷி என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், மசாலா, ரொட்டி, சீஸ், உப்பு, மிளகு, பால் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று ChatGPT யிடம் கேட்டிருக்கிறார்.

Google AI Chatbot: சுந்தர் பிச்சையின் மாஸ்டர் பிளான்!

அதற்கு ChatGPT, “உங்களிடம் உள்ள பொருட்களை வைத்து சீஸ் உருளைக்கிழங்கும், சுட்ட காய்கறி பொறியலும் செய்யலாம்" என்று பரிந்துரைத்தது. பின்னர் அதை எப்படிச் செய்வது என்றும் கேட்டிருக்கிறார் ஜோஷி.

Sun Breaks Off: சூரியனின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது! விண்வெளி புதிருக்கு விடை தேடும் விஞ்ஞானிகள்!

அப்போது விளக்கமாக பதில் கூறிய சாட் ஜிபிடி, அடுப்பை 180 டிகிரி வரை சூடாக்க வேண்டும், உருளைக்கிழங்கை எப்படி தோல் உரிக்க வேண்டும் என்பவற்றைக் கூறி செய்முறையை விலாவரியாக்க் கூறியிருக்கிறது. அதைக் கேட்டுக்கொண்டு அதன்படியே அரைமணி நேரத்தில் சமைத்து முடித்துவிட்டார் ஜோஷி.

அதுமட்டுமல்ல, சமைத்தது மிகவும் ருசியாக இருந்தது என்றும் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சுபம் ஜோஷி இந்த வீடியோவை கடந்த மாதமே வெளியிட்டிருக்கிறார். இதுவரை இவரது வீடியோவை சுமார் 50 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். ஒருசிலர், சாட் ஜிபிடி எப்படியும் உதவுகிறதா என்று ஆச்சரியமாக பதில் அளித்துள்ளனர். இன்னும் சிலர் சாட் ஜிபிடியை கேட்டு சமைப்பதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.

சட்டத் தேர்வில் கலக்கிய ChatGPT! C+ கிரேடுடன் பாஸ் செய்து அசத்தல்!

click me!