சார்ஜ் ஏற்றாமல் பல மாதங்கள் ஓடும்... உலகின் முதல் சோலார் கார் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Jun 12, 2022, 3:01 PM IST

எலெக்ட்ரிக் கார் மாடல்கள் சரியான திசையில் பயணம் செய்து வருகின்றன. ஆனால் அவற்றில் ஸ்கேலிங் பிரச்சினை உள்ளது. 


சோலார் எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் லைட்-இயர், சமீபத்தில் தனது ப்ரோடக்‌ஷன் ரெடி சோலார் சக்தியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்தது. லைட்-இயர் O என அழைக்கப்படும் இந்த சோலார் கார் ஆறு ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக கிடைத்து இருக்கிறது. 

நெதர்லாந்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது லைட்-இயர் O சோலார் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவை இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளது. 

Latest Videos

undefined

லைட்-இயர் மகிழ்ச்சி:

“நீங்கள் அதை பார்த்தீர்களா? நாங்கள் லைட்-இயர் O மாடலை உலகிற்கு அறிமுகம் செய்த தருணம். நாங்கள் மிகவும் சுவாரஸ்யம் மிக்க அறிமுக நிகழ்வுக்கு முற்றிலும் தயார் நிலையில் இருக்கிறோம். இதனை மிகவும் சிறப்பாக மாற்றியதற்கு, அனைவருக்கும் மிக்க நன்றி.” என லைட்-இயர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக 2019 வாக்கில் லைட்-இயர் O ப்ரோடோடைப் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஜூன் 9 ஆம் தேதி இந்த காரின் இறுதி வடிவம் மற்றும் காரின் தனித்துவம் மிக்க சிறப்பம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் போன்ற விவரங்களை ஆன்லைனில் வெளியிட்டது. 

“எலெக்ட்ரிக் கார் மாடல்கள் சரியான திசையில் பயணம் செய்து வருகின்றன. ஆனால் அவற்றில் ஸ்கேலிங் பிரச்சினை உள்ளது. 2030 வாக்கில் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 84 மில்லியன் எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்,” என்று லைட்-இயர் நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெக்ஸ் ஹூஃப்ஸ்லாட் தெரிவித்தார். 

ரேன்ஜ்:

லைட்-இயர் O எலெக்ட்ரிக் கார் 624 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டு இருக்கிறது. லைட்-இயர் மாடலில் 5 சதுர அடி அளவில் இறண்டு வளைந்த சோலார் பேனல்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இந்த கார் அதிகபட்சமாக 174 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. 

லைட்-இயர் O மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை பத்தே நொடிகளில் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரில்  உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சோலார் ரூஃப் காரை பல மாதங்கள் வரை சார்ஜ் செய்யாமல் இயக்கும் வசதியை வழங்குகிறது. 

இந்த காரில் 10.1 இன்ச் செண்டர் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோமோடிவ் மற்றும் கூகுள் நேடிவ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது. லைட்-இயர் O மாடலுக்கு ஓவர்-தி-ஏர் முறையிலான அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கார் மொத்தத்தில் 946 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த காரின் விலை 2 லட்சத்து 63 ஆயிரத்து 262 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

click me!