மணிக்கு 325 கி.மீ. வேகம்.. விலை ரூ. 5.50 கோடி தான்.... மெர்சிடிஸ் சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Jun 12, 2022, 1:20 PM IST

இந்த மாடல் மொத்தத்தில் இரண்டே யூனிட்கள் தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இரண்டு யூனிட்களும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டது.


மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய AMG GT பிளாக் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் AMG GT பிளாக் சீரிஸ் மாடல் துவக்க விலை ரூ. 5 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் கான்பிகரேஷன்களுக்கு ஏற்ப இதன் விலை வேறுபடும். இந்த மாடல் மொத்தத்தில் இரண்டே யூனிட்கள் தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. 

இந்தியாவுக்கு CBU முறையில் இறக்குமதி செய்யப்படும் நிலையில், இரண்டு யூனிட்களும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டது. இதில் ஒரு யூனிட் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் வினியோகம் செய்யப்பட்டு விட்டது. இந்த சூப்பர் கார் மாடலின் இரண்டாவது யூனிட் அடுத்த மாதம் வினியோகம் செய்யப்பட உள்ளது. 

Latest Videos

undefined

சக்தி வாய்ந்த மெர்சிடிஸ் மாடல்:

முந்தைய AMG மாடல்களை போன்று இல்லாமல், புதிய டிராக் சார்ந்த சூப்பர் கார் மாடலில் ஃபிளாட்-பிளேன் கிரான்க்‌ஷாப்ட் வி8 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் குறைந்த ஆர்.பி.எம்.-களிலும் மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 730 ஹெச்.பி. பவர் மற்றும் 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் AMG ஸ்பெக் 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இதே போன்று மணிக்கு 0 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தை எட்ட 9 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. இந்த சூப்பர் கார் மணிக்கு அதிகபட்சமாக 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதுவரை வெளியான மெர்சிடிஸ் மாடல்களில் சக்திவாயந்த வி8 மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. 

டிராக் உபகரணங்கள்:

இந்த காரின் முன்புறம் புதிய, அளவில் பெரிய முன்புற கிரில் கொண்டிருக்கிறது. இத்துடன் கார்பன் பைபர் டிப்யுசர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கார்பன் பைபர் பொனெட்டில் இரண்டு ஏர் வெண்ட்கள் உள்ளன. புதிய GT பிளாக் சீரிஸ் மாடலில் கார்பன் பைபர் முன்புற விங் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட பாடி நிறத்தால் ஆன லோவுர்ஸ் மற்றும் கார்பன் ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்திய சந்தையில்  மெர்சிடிஸ் AMG GT பிளாக் சீரிஸ் மாடல் லம்போர்கினி ஹரிகேன் STO மற்றும் போர்ஷே 911 GT2 RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. சமீபத்தில் மெர்சிடிஸ் AMG ஒன் சூப்பர் கார் ப்ரோடக்‌ஷன் ரெடி மாடலை அறிமுகம் செய்து இருந்தது. 

click me!