முழு சார்ஜ் செய்தால் 132 கி.மீ. ரேன்ஜ்.. அதிரடி அம்சங்களுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்...!

By Kevin Kaarki  |  First Published Jun 11, 2022, 6:03 PM IST

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லுகாஸ் டி.வி.எஸ். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர், 3.1 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.


இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதிதாக BattRE Storie பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய BattRE Storie மாடல் முழு சார்ஜ் செய்தால் 132 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய BattRE Storie எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 89 ஆயிரத்து 600, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புது BattRE Storie எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டர் மெட்டல் பேனல்கள், கனெக்டெட் டிரைவ் போன்ற அம்சங்களுடன் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லுகாஸ் டி.வி.எஸ். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர், 3.1 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 132 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

Tap to resize

Latest Videos

ப்ளூடூத் கனெக்டிவிட்டி:

இதில் உள்ள ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பல்வேறு விவரங்களை வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பீடோமீட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால், இன்கமிங் அழைப்புகளின் விவரங்களை டேஷ்போர்டில் காண்பிக்கும். 

புதிய BattRE Storie எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கனெக்டட் டிரைவ் அம்சம் உள்ளது. இதை கொண்டு அருகாமையில் உள்ள சார்ஜிங் மையம் பற்றி அறிந்து கொள்ளலாம். இதில் உள்ள பெரிய இருக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்குகிறது. மேலும் இதில் கால் வைப்பதற்கு அதிக இடவசதி உள்ளது. 

ஃபேம் 2 திட்டத்தின் கீழ் சலுகைகள்:

இந்திய சந்தையில் BattRE Storie எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ஃபேம் 2 திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டரின் அறிவிக்கப்பட்ட விலை ரூ. 89 ஆயிரத்து 600-இல் இருந்து மேலும் விலையை குறைக்க முடியும். BattRE Storie  வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 

நாடு முழுக்க 300-க்கும் அதிக நகரங்களில் நூற்றுக் கணக்கான டீலர்ஷிப்களில் BattRE Storie எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

click me!