LG நிறுவனம் வளைவு நெகிழ்வு தன்மையுடன் கூடிய LED டிஸ்ப்ளே ஒன்றை உருவாக்கி வந்த நிலையில், அதன் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், ஸ்மார்ட்போன், எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் புதுப்புது கண்டுபிடிப்புகளையும், தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், பிரபல LG நிறுவனம் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும் டிஸ்ப்ளே ஸ்கிரீனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கி வந்தது.
இந்த நிலையில், நெகிழ்வு தன்மை கொண்ட டிஸ்ப்ளே எப்படி இருக்கும் என்பது குறித்து முதல்பார்வையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மைக்ரோ அளவிலான LED, நெகிழ்தன்மை மிக்க மூலப்பொருட்களை கொண்டு ஸ்ட்ரெச்சபிள் டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளது. சாம்சங்கின் மடக்கு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதேபோல் LG நிறுவனத்தின் இந்த ரப்பர் டிஸ்ப்ளே மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
நெகிழ்வு டிஸ்ப்ளே (Stretchable display) சிறப்பம்சங்கள்:
எல்ஜி நிறுவனம் முதன்முறையாக 20% நெகிழ்வு தன்மை கொண்ட 100ppi தெளிவுதிறனுடன் கூடிய டிஸ்பளேவை உருவாக்கியுள்ளது. உயர்தர நெகிழ்வுதன்மை, நீடித்து உழைக்கும் திறன், செயல்திறன்மிக்க டிஸ்ப்ளேவாக இது பயன்படுகிறது.
கண்களுக்கான காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு சிலிக்கான் மெட்டிரியலால் செய்யப்பட்ட மிகவும் மீள்தன்மையுடைய ஃபிலிம்-வகை மூலக்கூறால் இந்த டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பார்ப்பதற்கு ரப்பர் பேண்ட் போன்ற நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, இது 12 அங்குல காட்சியை 14 அங்குலங்கள் வரை நீட்டிப்புதன்மை கொண்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்திற்குள் iPhone 13 வாங்கலாம்.. எப்படி? இப்படி..
நீட்டிக்கக்கூடிய இந்த டிஸ்பளேவில் 40 நானோ மீட்டருக்கும் குறைவான பிக்சல் கூடிய மைக்ரோ-LED ஒளி ஆற்றலை பயன்படுத்துகிறது. மீள்தன்மை இருப்பதால் கீழே விழுந்தாலோ, வேறு ஏதும் பொருள் இதன் மீது விழுந்தாலோ உடையாமல் நீடித்து நிலைத்தன்மையுடன் இருக்கும்.
வழக்கமான லீனியர் வயர்டு சிஸ்டம் போலல்லாமல், இந்த டிஸ்ப்ளேவில் உள்ள ஸ்பிரிங் வயர்டு சிஸ்டத்தில் நல்ல உகந்த அமைப்பு கொண்டுள்ளது. எனவே, கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளைவு நெளிவுகளை தாங்கி நிற்கும்.
தோல், ஆடை, ஃபர்னிச்சர்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் விமானம் போன்ற வளைந்த மேற்பரப்புகளில் எளிதாக வைக்கலாம். இனி வரும் ஆண்டுகளில் ஃபேஷன் பொருட்கள், அணிகலன்கள், கேமிங் கன்சோல்கள் என பல்வேறுபட்ட பொருட்களிலும் இந்த நெகிழ்வு தன்மை டிஸ்ப்ளேவை ஒட்ட வைத்து பயன்படுத்தலாம்.
எல்ஜி நிறுவனத்தின் இந்த ஃப்ளெக்ஸிபிள் டிஸ்பளே அதிகாரப்பூர்வமாக எப்போது அறிமுகம் செய்யப்படும், வர்த்தக பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.