விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் சூரிய சக்தியில் இயங்குபவை என்பதால் சூரியன் இல்லாத நேரத்தில் அவை செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
நிலவு ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ள இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தில் பிரக்யான் ரோவர், நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் தூரம் வெற்றிகரமாக வலம் வந்திருக்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் சூரியன் மறைந்து வருவதன் காரணமாக விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டையும் ஸ்லீப் மோட் (Sleep Mode) நிலைக்கு மாற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாராகி வருகிறது.
இந்தியாவின் முதல் சூரிய ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் ஆதித்யா எல்1 விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, சந்திராயன்-3 குறித்த அப்டேட்டை இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார்.
122 வருடத்தில் இல்லாத வெப்பம்! இந்தியாவை வாட்டி வதைத்த மிக வறண்ட ஆகஸ்ட் மாதம்!
Chandrayaan-3 Mission:
🏏Pragyan 100*
Meanwhile, over the Moon, Pragan Rover has traversed over 100 meters and continuing. pic.twitter.com/J1jR3rP6CZ
ஜூலை 14, 2023 அன்று, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3, சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாகவும், சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகவும் பெயர் பெற்றது. நிலவில் தண்ணீரின் இருக்கிறதா என்று ஆராய்வதும் நிலவின் மேற்பரப்பு அம்சங்களை ஆராய்வதும் இந்தப் பணியின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.
ஆகஸ்ட் 25 முதல் செயல்படும் பிரக்யான் ரோவர், அதன் பணிகளை விடாமுயற்சியுடன் செய்து வருகிறது. ரோவரின் 100 மீட்டர் பயணத்தில், நிலவில் சல்பர், இரும்பு, ஆக்ஸிஜன் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. பிளாஸ்மா இருப்பதையும் கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், நிலவில் பகல் நேரம் முடிவுக்கு வருவதன் அறிகுறியாக சூரிய ஒளி மங்கத் தொடங்கியுள்ளது. இதனால், இஸ்ரோ விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டையும் ஸ்லீப் மோடில் (Sleep Mode) க்கு மாற்றப் போகிறது. இரண்டும் சூரிய சக்தியில் இயங்குபவை என்பதால் சூரியன் இல்லாத நேரத்தில் அவை செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
அதே நேரத்தில் மீண்டும் நிலவில் பகல் நேரம் வரும்போது, ரோவரும் லேண்டரும் நல்ல நிலையில் இருந்தால், அவற்றை மீண்டும் செயல்பட வைக்க முயற்சி செய்யலாம் என்று இஸ்ரோ கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏழே நிமிடத்தில் புற்றுநோய்க்கு நிவாரணம்! பிரிட்டனில் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வரும் ஊசி!