ஜியோ ரூ. 2999 சலுகையிலும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 555 விலையில் பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ. 499 மதிப்புள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ரூ. 2999 விலை கொண்ட வருடாந்திர பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையுடனும் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜிடயோ ரூ. 555 கிரிகெட் டேட்டா ஆட் ஆன் சலுகை 55 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 55GB டேட்டா மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. புதிய சலுகை நேற்று (மார்ச் 26) துவங்கி இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் தொடரை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரூ. 2999 வருடாந்திர சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் ஆஃபர் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு எள்ளது.
ஜியோ ரூ. 555 மற்றும் ரூ. 2999 சலுகை பலன்கள்:
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 55GB டேட்டா 55 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தாவும் இந்த சலுகையுடன் வழங்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 சலைகையில் வாய்ஸ் கால்
மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
ஜியோ ரூ. 2999 சலுகையிலும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
இந்தியன் பிரீமியர் லீக்:
ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்றே இரு சலுகைகளும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. இரு சலுகைகளுடன் வழங்கப்படும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொண்டு நேரலையில் விளையாட்டு போட்டிகளை கண்டு களிக்க முடியும். இத்துடன் திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என ஏராளமான தரவுகளை பார்க்க முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 மற்றும் ரூ. 2999 சலுகைகளை மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். இரு சலுகைகளும் மூன்றாம் தரப்பு செயலிகள் மற்றும் வலைதளங்களிலும் கிடைக்கிறது.