இண்டர்நெட் இல்லாம கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம் - எப்படி தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Mar 27, 2022, 4:56 PM IST

இவற்றில் எந்த வழித்தடம் எத்தனை தூரத்தில் சென்றடைய முடியும் என்ற விவரங்களையும் கூகுள் மேப்ஸ் தெரிவித்து விடும். 


ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது வெளியிடப்படும் அனைத்து மாடல்களுக்கும் பெரும்பாலும் கூகுள் மேப்ஸ் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்பட்டு விடுகிறது. இதுதவிர கூகுள் நிறுவனத்தின் மேலும் சில செயலிகளும் நம் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அருகாமையில் தெரியாத ஏரியாக்களுக்கு செல்லும் சரியான இடத்திற்கு அழைத்து செல்லும் பணியை கூகுள் மேப்ஸ் சிறப்பாக செய்து விடுகிறது. 

ஒருவர் இருக்கும் லொகோஷனை தானாக டிராக் செய்து விட்டு, அதே இடத்தில் இருந்து பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று வழிகளை காண்பித்து கூகுள் மேப்ஸ் எப்போதும் அசத்தும். மேலும் இவற்றில் எந்த வழித்தடம் எத்தனை தூரத்தில் சென்றடைய முடியும் என்ற விவரங்களையும் கூகுள் மேப்ஸ் தெரிவித்து விடும். இதனாலேயே இதனை உலகம் முழுக்க பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

மேப்ஸ் ஆஃப்லைன்:

நம் ஸ்மார்ட்போனில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் போதுமான பேட்டரி இருக்கும் வரை உலகின் எந்த மூளைக்கு சென்று சிக்கிக் கொண்டாலும், மிக எளிமையாக போக வேண்டிய இடத்திற்கு யார் உதவியும் இன்றி பாதுகாப்பாக சென்று விட முடியும். எனினும், ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டா தீர்ந்து போனாலோ அல்லது, இணைய வேகம் மிகவும் குறைவாக இருந்தால் என்ன செய்வது? பதற்றம் வேண்டாம் இதற்காக தான் கூகுள் மேப்ஸ் செயலியில் ஆஃப்லைன் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் மேப்ஸ் ஆஃப்லைன் அம்சம் கொண்டு இண்டர்நெட் இணைப்பின்றி எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடியும். நெட்வொர்க் கவரேஜ் இல்லாத பகுதிகளில் பயணம் செய்ய இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனினும், இது போன்ற பகுதிகளுக்கு செல்லும் முன் அந்த பகுதிக்கான மேப் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். 

கூகுள் மேப்ஸ் ஆஃப்லைன் பெறுவது எப்படி?

கூகுள் மேப்ஸ் செயலி ஸ்மார்ட்போன் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். என இரு தளங்களிலும் கிடைக்கிறது. செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டதும், என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

1 - கூகுள் மேப்ஸ் செயலியில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை சர்ச் பாக்ஸ் சென்று தேடிக் கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிட்ட லொகோஷேனை தேடுவதற்கு பதில், பெரிய ஏரியா அல்லது நகரை தேடுவது நல்லது.

2 - லொகோஷன் பெயரை பதிவிட்டதும் திரையின் கீழ் புறமாக பெயர் தெரியும். இதோடு மேலும் பல விவரங்களை காண்பிக்கும் வகையில் திரை முழுக்க விரிவடையும்.

3 - திரையின் மேல்புறம் வலதுபுறத்தில் மூன்று புள்ளிகள் இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்தால் கூடுதல் அம்சங்களை இயக்க முடியும்.

4 - அவற்றில் இருந்து டவுன்லோடு ஆஃப்லைன் மேப் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

5 - டவுன்லோட் செய்ய வேண்டிய பகுதியை தேர்வு செய்ய வேண்டும். பின் கூகுள் மேப்ஸ் நீங்கள் தேர்வு செய்த பகுதியை காண்பிக்கும்.

6 - இனி டவுன்லோட் பட்டனை கிளிக் செய்ததும், டவுன்லோட் துவங்கும். டவுன்லோடு பற்றிய விவரங்கள் திரையின் கீழ் காண்பிக்கும். டவுன்லோடு முடிந்த பின்னர் அதனை இணைய வசதி இன்றி பயன்படுத்த துவங்கலாம். 

நினைவில் கொள்ள வேண்டியவை:

ஆஃப்லைனில் நீங்கள் டவுன்லோடு செய்யும் பகுதி 15 நாட்களுக்கு பின் எக்ஸ்பயர் ஆகி விடும். இதனால் நீங்கள் டவுன்லோடு செய்யும் தரவுகளை எஸ்.டி. கார்டுக்கு மாற்றிக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்ய மெனு -- ஆஃப்லைன் ஏரியாஸ் -- செட்டிங்ஸ் -- ஸ்டோரேஜ் பிரெஃபரன்சஸ் போன்ற ஆப்ஷன்களில் இருந்து டிவைஸ் டு எஸ்.டி. கார்டு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

click me!