ரிலையன்ஸ் ஜியோ :
ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய எண்ணிலடங்கா, சலுகையால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக ஜியோ பல செயலியை அறிமுகம் செய்தது. அதில் ஒன்று ஜியோ சினிமா . தற்போது இந்த ஜியோ சினிமாவில் புதிய அப்டேட் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
பயன்கள் :
இலவச டேட்டா மட்டுமின்றி, அதே இலவச டேட்டா பயன்படுத்தி, ரிலையன்ஸ் ஜியோசினிமா செயலி மூலம், பல மொழிகளில் உள்ள அனைத்து சினிமாவையும் நொடி பொழுதில் பார்க்க முடியும் மற்றும் டவுன் லோட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரியுமா உங்களுக்கு ஜியோ ஹேப்பி ஹவர் :
ஜியோ ஹேப்பி ஹவர் அதிகாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், சினிமாவை ஆன்லைனில் பார்த்து கொள்ளலாம் மற்றும் தேவை என்றால் டவுன் லோட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அப்டேட் :
புதிய அப்டேட் மூலம் திரைப்படங்களை ஸ்மார்ட் டவுன்லோடு மூலம் இரவு உறங்கும் முன் டவுன்லோடு நேரத்தை செட் செய்து காலை எழுந்ததும் டவுன்லோடு ஆன திரைப்படத்தை பார்கலாம் .
இரண்டு ஆப்ஷன் :
உடனடி டவுன்லோடு மற்றும் ஸ்மார்ட் டவுன்லோடு என இரண்டு ஆப்ஷன்கள் திரையில் தெரியும்.
இதில் ஸ்மார்ட் டவுன் லோட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், தேர்வு செய்த மறு நொடியே படம் முழுவதும் டவுன்லோட் ஆகி இருக்கும் .