மலிவு விலையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் தனது அடுத்த போனை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது
டெலிகாம் சேவைகள் தவிர, சந்தையில் மலிவான போன்களை வழங்குவதில் ஜியோ நிறுவனம் பெயர் பெற்றுள்ளது. அதனை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில், ஜியோ தனது ஜியோபாரத் சீரிஸின் கீழ் ஜியோபாரத் பி1 என்ற புதிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோபாரத் வி2 மற்றும் கே1 கார்பன் மாடல்களின் சற்று மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் JioBharat B1 Series என பட்டியலிடப்பட்டுள்ளது. இது, சற்று பெரிய திரையுடன் கூடிய அடிப்படை 4G ஃபோன் ஆகும்.
ஜியோவின் மற்றொரு லோ எண்ட் செல்போனான ஜியோபாரத் பி1 சீரிஸ், ரூ.1,299 விலையில் கிடைக்கிறது. புதிய JioBharat B1 ஃபோன் அதன் முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது அதன் திரை மற்றும் பேட்டரி திறனில் சிறிய அப்டேட்கள் உள்ளன. அதாவது, 2.4 இன்ச் திரை மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி இந்த ஃபோனில் உள்ளது. வேறு எதுவும் பெரிய மாற்றங்கள் இல்லை.
ஃபோனில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை தயாரிப்பு படங்கள் காட்டினாலும், கேமராவின் மெகாபிக்சல்கள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பயனர்கள் திரைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளையாட்டு சிறப்பம்சங்களை ரசிக்க முடியும் என ஜியோ கூறுவதால், மற்ற மாடல்களைப் போலவே இந்த ஃபோனும் ஜியோ ஆப்ஸ் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.
ஒன்பிளஸ் முதல் சாம்சங் வரை.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆப்பு அடித்த இந்திய அரசு..
மொத்தம் 23 மொழிகளுக்கான ஆதரவை அளிக்கும் ஜியோபாரத் பி1 சீரிஸ் செல்போன், புதிய மற்றும் பழைய ஜியோ சிம்களில் வேலை செய்கிறது. இருப்பினும், ஜியோ பயனர்கள், ஜியோபாரத் போனின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்க ரூ.123 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் திட்டத்தில் இருந்தால் சிறப்பாக இருக்கும். மேலும் ஜியோ அல்லாத சிம் கார்டுகளை ஜியோபாரத் தொலைபேசிகளில் பயன்படுத்த முடியாது.
இந்த ஃபோன் கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. பின்பக்க பேனல், இரண்டு டோன் ஃபினிஷ் கொண்ட பிளாஸ்டிக், மேட் ஃபினிஷ், மையத்தில் ஜியோ லோகோ உள்ளது. UPI பேமெண்ட்டுகளுக்கான JioPay ஆப்ஸ் மற்றும் கேமராவைப் பயன்படுத்தி QR பேமெண்ட்டுகளை ஸ்கேன் செய்யும் வசதியும் உள்ளது.