வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் இந்தியாவில் 5G சேவைக் கொண்டுவராததால் மலிவான விலையில் கூடுதல் பலன்கள் கொண்ட திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது.
பயனர் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கட்டுப்படுத்த, வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிய சலுகை மூலம் கூடுதல் டேட்டா வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வோடபோன் ஐடியாவில் ரூ.299 ப்ரீபெய்ட் பிளானில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா கிடைக்கும். இந்த பிளானில் வழக்கமாக தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது. அந்த தினசரி டேட்டாவுடன் கூடுதலாக டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
299 பிளான்
வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 1.5GB டேட்டா கிடைக்கும். இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்கள். இந்த நாட்களில் தினமும் 1.5GB டேட்டா கிடைப்பதுடன் கூடுதல் 5GB டேட்டாவும் தரப்படும். இந்த கூடுதல் டேட்டாவை ரீசார்ஜ் செய்த முதல் 3 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இந்த திட்டம் Vi Hero அன்லிமிடெட் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது இது அன்லிமிடெட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய Binge All Night உடன் கிடைக்கிறது.
மேலும், ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் மற்றும் ஐபோன்களில் Vi App வழியாக Vi Movies மற்றும் TV கிளாசிக் ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
5G நெட்வொர்க் இல்லை
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை இந்தியாவின் மூன்று முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உள்ளன. இவற்றில், வோடபோன் ஐடியா தவிர மற்ற இரண்டு நிறுவனங்களுப் 5ஜி சேவைகளை வழங்குகின்றன. அதுவும் அதன் அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன.
வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் இந்தியாவில் 5G சேவைக் கொண்டுவராததால் மற்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து போட்டியிட முடியாத நிலையில் உள்ளது. இதனால், மலிவான விலையில் கூடுதல் பலன்கள் கொண்ட திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்கிறது.
அதிவேக இன்டர்நெட்.. ஓடிடி வசதியும் இருக்கு.. இப்படியொரு ரீசார்ஜ் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..