ஜியோ தான் கரெக்ட்டு ..!!! ட்ராயை முறைக்கும் ஏர்டெல் ......!!!

 |  First Published Feb 3, 2017, 4:39 PM IST



ஜியோ :

ஜியோ என்றாலே  போதும்.  சூப்பர் பா... எனக்கு ஒரு சிம்  கிடைக்குமா என  அனைவராலும்  வாய் திறந்து கேட்க வைத்தது  ஜியோ என்றால் அது  ஆணித்தரமான  உண்மைதான்.

Tap to resize

Latest Videos

எத்தனை  சலுகைகள் :

சலுகைகளை வாரி வழங்குவதில் ஜியோ வை  யாராலும் மிஞ்ச முடியவில்லை என்று கூட கூற முடியும். இதன் விளைவாக , மற்ற  தொலை தொடர்பு  நிறுவனங்கள், ஜியோ வுடன்  போட்டி போட முடியாமல் தவித்து   வந்த  நிலையில்,  தொலைதொடர்பு  ஒழுங்கு  முறை ஆணையத்திடம்  முறையிட , அவர்களும்  ஜியோ வுக்கே  ஆதரவு தெரிவிக்க  தற்போது கடும் கொந்தளிப்புடன்  உள்ளார்கள்  மற்ற  நிறுவனங்கள்

ஜியோவிற்கு  எதிராக  மற்ற நிறுவனங்கள் :

ஜியோ அளித்த வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்கள் முறைகேடானது என ஏர்டெல்,வோடபோன் உள்ளிட்ட மற்ற முன்னனி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் புகார் அளித்தது.இந்த புகாரை விசாரித்த டிராய் ஜியோவின் 2 ஆஃபர்களையும் ஆய்வு  செய்து  தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

ஜியோவுக்கு  ஆதரவு :

ஒரு புதிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாகும் போது அறிமுகத்திட்டம் 90 நாட்கள் வழங்க அனுமதி உண்டு என்றும்,  அதனால் மேலும் ஜியோ ஆஃபரில் எதுவும் முறைகேடு இல்லை,  விதிமீறலும்  இல்லை  என  ஜியோவுக்கு  சாதகமாக  கருத்து தெரிவித்துள்ளது.

கடும்  கடுப்பு :

இதனால் ஏர்டெல் உள்ளிட்ட  மற்ற  தொலைதொடர்பு  நிறுவனங்கள்,  ட்ராய் மீது கடும் கொந்தளிப்பில்  உள்ளது.   

 

click me!