இந்திய டெலகாம் சந்தையை தொடர்ந்து, தற்போது பிராட் பேன்ட் சேவையில் இறங்க உள்ளது ஜியோ.
பிராட்பேன்ட் சேவையை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சோதனை நடந்தப்பட்டு வந்தது.பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் முதல், குறைந்த அளவிலான எண்ணிகையில் வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேன்ட் சேவை வழங்கப்பட்டு வந்துள்ளது
சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக, இலவச டேட்டா வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி,
1100 ஜிபி டேட்டா
ஜியோ ஃபைபர் திட்டத்தில் முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
முதற்கட்டமாக வழங்கப்படும் 100 ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்பட்டாலும், கூடுதலாக வழங்கப்படும் 1000 ஜிபி டேட்டா அதே 100Mbps வேகத்தில் தான் வழங்கப்படுமா என்பதை குறிப்பிடவில்லை
பாதுகாப்பு முன்பணம் ரூ.4500
பாதுகாப்பு முன்பணம் ரூ.4500 செலுத்த வேண்டும் என்றும், அதில் ஜியோ ரவுட்டர் இன்ஸ்டால் செய்யப்படும் என்றும், இதே ரவுட்டர் கொண்டு IPTV மூலம் தொலைகாட்சி சேனல்களை பார்க்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தலைமை தி்ட்ட வல்லுநர் அனுஷ்மன் தாக்குர் தெரிவித்திருக்கிறார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இதுவரை இந்தியா முழுக்க சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்-களை ரிலையன்ஸ ஜியோ நிறுவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.