உலக அரங்கில் புதிய வரலாறு படைத்த இஸ்ரோ: விண்வெளியில் இணைக்கப்பட்ட 2 செயற்கை கோள்கள்

Published : Jan 16, 2025, 10:35 AM ISTUpdated : Jan 16, 2025, 10:48 AM IST
உலக அரங்கில் புதிய வரலாறு படைத்த இஸ்ரோ: விண்வெளியில் இணைக்கப்பட்ட 2 செயற்கை கோள்கள்

சுருக்கம்

விண்வெளியில் முதல் முறையாக இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்து புதிய சாதனை படைத்தது இஸ்ரோ. ஸ்பேடெக்ஸ் விண்வெளி இணைப்பு வெற்றி.

விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது. நாட்டின் முதல் விண்வெளி இணைப்புப் பரிசோதனையான ஸ்பேடெக்ஸ் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இன்று காலையில் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் சேஸர் மற்றும் டார்கெட் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இணைக்கப்பட்டன. விண்ணில் ஏவப்பட்ட நான்காவது முயற்சியிலேயே இஸ்ரோ இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதீய அந்தரீக்ஷ் ஸ்டேஷன் போன்ற திட்டங்களுக்கு இன்றியமையாத தொழில்நுட்பம்தான் ஸ்பேஸ் டாக்கிங்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2024 டிசம்பர் 30 ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இஸ்ரோ இரண்டு ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. எஸ்டிஎக்ஸ் 01- சேஸர், எஸ்டிஎக்ஸ் 02- டார்கெட் என்று இந்த செயற்கைக்கோள்களுக்குப் பெயரிடப்பட்டது. ஜனவரி 6 ஆம் தேதி இவற்றின் இணைப்புப் பரிசோதனையை நடத்த இஸ்ரோ முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் காரணங்களால் இந்த முயற்சி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

ஒன்பதாம் தேதி சேஸர், டார்கெட் செயற்கைக்கோள்களுக்கு இடையிலான தூரத்தை 500 மீட்டரில் இருந்து 225 மீட்டராகக் குறைக்கும்போது மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இணைப்புப் பரிசோதனை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இஸ்ரோ மிகுந்த எச்சரிக்கையுடன் இணைப்புக்கான மூன்றாவது முயற்சியைத் தொடங்கியது.

11ம் தேதியன்று மூன்றாவது முயற்சியில் 500 மீட்டரில் இருந்து 230 மீட்டர், 105 மீட்டர், 15 மீட்டர், 3 மீட்டர் என இஸ்ரோ எளிதாக செயற்கைக்கோள்களைக் கொண்டு வந்தது. ஆனால் இது ஒரு சோதனை ஓட்டம் மட்டுமே என்று இஸ்ரோ பின்னர் அறிவித்தது. செயற்கைக்கோள்களை மீண்டும் பாதுகாப்பான தூரத்திற்கு மாற்றியது. தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின்னரே அடுத்த நடவடிக்கை இருக்கும் என்ற அறிவிப்பு வந்ததால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதியாக, இன்று காலை ஸ்பேடெக்ஸ் விண்வெளி இணைப்புப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பெருமையுடன் அறிவிக்கப்பட்டது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!