
அந்த வகையில் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் iQoo Neo போனின் 9 சீரிஸ், சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட iQoo Neo 8 போனின் வெற்றி வரிசையில் இதுவும் சேரும் என்று கூறப்படுகிறது. இந்தத் சீரிஸ் அடிப்படை, iQoo Neo 8 மற்றும் iQoo Neo 8 Pro உடன் தொடங்கப்பட்டது.
வரவிருக்கும் iQoo Neo 9 சீரிஸ், எதிர்வரும் 2024ம் ஆண்டில் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்நிறுவனம் iQoo Neo 9 சீரிஸ் வெளியீட்டு காலவரிசையை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், உயர்நிலை iQoo Neo 9 Pro ஒரு சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
Weiboவில் வெளியான ஒரு பதிவில், iQoo நியோ 9 சீரிஸ் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்படும் என்பதை iQoo உறுதிப்படுத்தியது. iQoo Neo 9 மாடல்களில் ஒன்று, சிவப்பு மற்றும் வெள்ளை என்று இரு நிறங்கள் கொண்டு ஒரு டீஸர் போல வெளியிடப்பட்டுள்ளது. ஃபோன் மேல், விளிம்பில் ஐஆர் பிளாஸ்டர் மற்றும் இடது விளிம்பில் வால்யூம் பட்டன்கள் மற்றும் பவர் பட்டன் உள்ளது.
iQoo Neo 9 ஸ்பெக்
இந்த புதிய iQoo Neo 9 ஆனது Snapdragon 8 Gen 2 SoC உடன் வரும் என்றும், 16GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மறுபுறம், iQoo Neo 9 Pro ஆனது, 12GB RAM மற்றும் 256GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட MediaTek Dimensity 9300 சிப்செட்டைப் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான FunTouchOS 14 அல்லது OriginOS 4 உடன் ஒவ்வொரு பிராந்தியத்தின் அடிப்படையில் அது மாறுபடும் என்று கூறப்படுகிறது.
சைலென்ட்டா ரிலீஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A15 ஸ்மார்ட்போன்! அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?
iQoo Neo 8 சீரிஸ் மாடல்களுக்கு சுமார் 29.300ல் இருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது, ஆகவே வரவிருக்கும் இந்த iQoo Neo 9 சீரிஸ் அதை விட சற்று கூடுதல் விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.