
இந்தியாவில் ஐபோன் SE 2020 மாடலின் விலை பெருமளவு குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் 5ஜி ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், புதிய ஐபோன் SE அறிமுகமானாலும், ஐபோன் SE 2020 மாடலை தொடர்ந்து விற்பனை செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுவும் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன் SE 2020 மாடல் விலையை அதிகளவு குறைத்து விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐபோன் SE 2020 மாடலின் விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படும் ஆப்பிள் நிகழ்வுக்கு பின் ஐபோன் SE 2020 மாடல் விலை குறைக்கப்படும் என்றும் இதன் புதிய விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் சாதனங்களை தற்போது இருப்பதை விட மேலும் அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவே ஆப்பிள் இவ்வாறு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் SE 2020 மாடலின் விலை ரூ. 43 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த மாடல் ரூ. 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக ஆன்லைன் தளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனைகளில் ஐபோன் SE 2020 மாடல் குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஐபோன் SE மாடலை கொண்டு பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எதிர்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஐபோன் SE 3 மாடலில் மேம்பட்ட ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, தடிமனான பெசல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இது தற்போதைய ஐபோன் SE 2020 மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.