iPhone 16 சீரிஸ்.. Xiaomi 14 Pro - 2024ஐ குதூகலமாக்கவரும் இரு முக்கிய போன்கள் - உத்தேச ஸ்பெக் & விலை இதோ?

Ansgar R |  
Published : Jan 02, 2024, 10:16 PM IST
iPhone 16 சீரிஸ்.. Xiaomi 14 Pro - 2024ஐ குதூகலமாக்கவரும் இரு முக்கிய போன்கள் - உத்தேச ஸ்பெக் & விலை இதோ?

சுருக்கம்

iPhone 16 Series : கடந்த 2023ம் ஆண்டு ஐபோன் 15 சீரிஸ், சாம்சங் S23 சீரிஸ், பிக்சல் 8 சீரிஸ் மற்றும் பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த 2024ம் ஆண்டில் பல பிரபலமான பிராண்டுகளின் ஃபிளாக்ஷிப் போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த 2024ம் ஆண்டு இரு முக்கிய போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்த இரு மொபைல்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

ஆப்பிள் நிறுவனம் அதன் முதன்மையான ஐபோன் 16 ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, இருப்பினும் சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி ஐபோன் நிறுவனம் வருகின்ற செப்டம்பர் 2024ல் அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை (ஐபோன் 16 சீரிஸ்) வெளியிட முடிவு செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. iOS 18 இயங்குதளத்துடன் மென்பொருள் துறையில் AI- அடிப்படையிலான மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபோன் 16 சீரிஸ் ஆரம்ப விலை 80,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Honor X50 GT : வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த ஹானர் X50 GT விவரங்கள்.. தாறுமாறான அம்சங்கள்..!!

Xiaomi 14 Pro இந்த ஆண்டு அக்டோபரில் ஒரு வெளியீட்டு நிகழ்வில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சியோமியின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2024 இல் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024ல் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Xiaomi 14 Pro, Qualcomm Snapdragon 8 Gen 3 செயலி மற்றும் WQHD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3,000 nitsன் உச்ச பிரைட்னெஸ் மற்றும் 522ppi பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4880mAh பேட்டரியைப் பெறுகிறது. இதன் விலை 1,18,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஜனவரியில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களை பாருங்க

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!