ட்விட்டருக்குப் போட்டியாக 'த்ரெட்ஸ்'.. களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் - ரிலீஸ் தேதி குறித்த மெட்டா !

By Raghupati R  |  First Published Jul 4, 2023, 11:29 PM IST

ட்விட்டருக்குப் போட்டியாக த்ரெட்ஸ் என்ற செயலியை உருவாக்கி வருகிறது இன்ஸ்டாகிராம். இந்த ஆப் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளத்தை மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் என்ற செயலியை ட்விட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக களமிறக்க முடிவு செய்துள்ளது. இப்போது மெட்டா ​​நிறுவனம் இதை வரும் நாட்களில் அல்லது வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. ஆப் ஸ்டோரில் உள்ள பட்டியலானது, இந்த அப்ளிகேஷன் ஜூலை 6 ஆம் தேதி, இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படலாம் என்பதாக கூறுகிறது.

Tap to resize

Latest Videos

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமின் ட்விட்டர் மாற்று, த்ரெட்ஸ், நாம் எதிர்பார்த்ததை விட விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்வீட் டெக்கை அணுகுவதற்கான கட்டண வரம்பு மற்றும் அங்கீகாரத்திற்கான தேவை உள்ளிட்ட கூடுதல் மாற்றங்களை மஸ்க் அறிவித்த பிறகு, ட்விட்டரின் பயனர்கள் சேவையில் அதிருப்தி அடைந்தனர். இதற்கிடையில், த்ரெட்ஸ் பற்றிய வதந்திகள் சிறிது காலமாக பரவி வருகின்றன.

மேலும் ட்விட்டரின் உரிமையாளரான எலான் மஸ்க் மற்றும் மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு இடையேயான மோதலைப் பற்றிய நகைச்சுவைகள் வைரலானது. உங்களிடம் ஐபோன் இருந்தால், ஆப் ஸ்டோரில் த்ரெட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலியைப் பார்க்கலாம். மென்பொருள் ஸ்டோரில் இந்த மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

"இன்று நீங்கள் விரும்பும் தலைப்புகள் முதல் நாளை பிரபலமாக இருக்கும் தலைப்புகள் வரை அனைத்தையும் விவாதிக்க சமூகங்கள் ஒன்றிணைவது த்ரெட்ஸ் ஆகும். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதைப் பின்தொடர்ந்து நேரடியாக உங்களுக்குப் பிடித்த படைப்பாளிகள் மற்றும் அதே விஷயங்களை விரும்பும் மற்றவர்களுடன் இணையலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பயன்படுத்தி த்ரெட்களில் உள்நுழைய முடியும். படம் மற்றும் வீடியோ பகிர்வு பயன்பாட்டில் அவர்கள் தற்போது பின்பற்றும் சுயவிவரங்களைப் பின்தொடர முடியும். எனவே, உங்களிடம் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தால், த்ரெட்களுக்கு பதிவு செய்வது ஒரு சுமையாக இருக்காது. த்ரெட்ஸ் என்ற இந்த ஆப் ட்விட்டரைப் போலவே செயல்படும். மக்கள் தங்கள் கருத்துக்களைச் பதிவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Jio Bharat : வெறும் ரூ.999க்கு கிடைக்கும் ஜியோ பாரத் போன்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

click me!