பிரபல சோசியல் மீடியா செயலியான இன்ஸ்டாகிராமில் தற்போது மிகப்பெரிய ஸ்கேம்கள் நடைபெற்று வருகிறது. மொபைல் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் தற்போது உலகம் முழுவதும் பல கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 229 மில்லியன் பயனர்கள் உள்ளனர். சந்தேகத்திற்கு இடமில்லாத பயனர்களின் பணத்தை ஃபிஷிங் மோசடிகள் மூலம் ஹேக்கர்கள் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
பயனர்கள் தங்கள் கணக்குகள் குளோன் செய்யப்படுவதாகவும், ஹேக்கர்கள் தவறான நோக்கத்துடன் தங்கள் தொடர்புகளை அணுகுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனை சமீபத்தில் கண்டறிந்து அதனை சரி செய்தது இன்ஸ்டாகிராம். தற்போது வேறுவகையான மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..
தற்போது ஓ மை காட், இது உங்களோட போட்டோவா? அல்லது இது உங்களோட வீடியோவா? என்று டெக்ஸ்ட் மெசேஜ் பலருக்கு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இந்த குறுஞ்செய்தியை க்ளிக் செய்தால், அது நேரடியாக இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்வது போல இருக்கும்.
ஆனால் அது இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை. அதில் உங்களது குறித்த தகவல்களை பகிர வேண்டாம் என்றும், அது போலியான வெப்சைட் என்றும் டெக் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற தெரியாத, போலியான செய்திகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..