பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! மைனாரிட்டி பங்குகளை வாங்கும் கூகுள்!

By SG Balan  |  First Published May 25, 2024, 4:37 PM IST

கூகுள் முதலீடு செய்ய முன்மொழிந்த தொகையையோ அல்லது அதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனம் திரட்டும் நிதியின் விவரங்களையோ வெளியிடவில்லை.


ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் மைனாரிட்டி பங்குகளை வாங்கி முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் மொழிந்துள்ளது. இதையே பிளிப்கார்ட்டின் தாய் நிறுவனமான வால்மார்ட் குழுமமும் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் உரிமையாளரான வால்மார்ட் தலைமையில் நடக்கும் பிளிப்கார்ட்டின் தற்போதைய நிதிச் சுற்றின் ஒரு பகுதியாக இந்த முதலீடு இருக்கும். கூகுள் முதலீடு செய்ய முன்மொழிந்த தொகையையோ அல்லது அதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனம் திரட்டும் நிதியின் விவரங்களையோ வெளியிடவில்லை.

Tap to resize

Latest Videos

இந்த அறிவிப்பு கிளவுட் தொழில்நுட்பத்தில் இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் பிளிப்கார்ட் விரும்பும் முதலீட்டுத் தொகை அல்லது மொத்த நிதியை வெளியிடவில்லை. கூகுளின் முதலீடு கிடைத்தால் தனது வணிக வளர்ச்சியை அதிகரிக்கவும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பயனளிக்கும் என்று பிளிப்கார்ட் எதிர்பார்க்கிறது.

"வால்மார்ட் தலைமையிலான சமீபத்திய நிதிச் சுற்றின் ஒரு பகுதியாக, இரு தரப்பினரின் ஒழுங்குமுறை மற்றும் பிற வழக்கமான ஒப்புதலுக்கு உட்பட்டு, மைனாரிட்டி முதலீட்டாளராக கூகுளைச் சேர்ப்பதாக பிளிப்கார்ட் இன்று அறிவித்தது" என்று பிளிப்கார்ட்டின் அறிக்கை கூறுகிறது.

"கூகுளின் முதலீடு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தில் கூகுளின் ஒத்துழைப்பு பிளிப்கார்ட் வணிகத்தை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் விதமாக டிஜிட்டல் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கவும் உதவும்" என்றும் தெரிவித்துள்ளது.

click me!