இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்-க்கு லைக் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்டோரிஸ் அம்சத்தை இயக்க புது வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் இன்ஸ்டா ஸ்டோரிக்களுக்கு லைக் செய்ய முடியும். முன்னதாக பயனர்கள் ஸ்டோரிக்களை ஷேர் செய்யவும், கமெண்ட் மூலம் ரிப்ளை செய்வதற்கான அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
மேலும் லைக் செய்வது மற்றவர்களினை டைரக்ட் மெசேஜ் விண்டோவில் தான் பிரதிபலித்து வந்தது. புதிய வசதியின் மூலம் லைக் செய்யும் போது லைக் பட்டன் அவர்களின் மெசேஜ் விண்டோவிற்கு செல்லாது. அந்த வகையில் டைரக்ட் மெசேஜ் ஆப்ஷனை பயன்படுத்தாமல் இனி இன்ஸ்டா ஸ்டோரிக்கு லைக் செய்யலாம்.
இதுபற்றிய அறிவிப்பை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வீடியோ வடிவில் தெரிவித்தார். புது அம்சம் பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த அப்டேட் மூலம் வழக்கமான ஃபீட் போஸ்ட் போன்றே ஸ்டோரியுடன் உரையாட முடியும். இதற்கு செண்ட் மெசேஜ் மற்றும் பேப்ர் ஏர்பிளேன் ஆப்ஷன்களுக்கு இடையில் உள்ள லைக் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது பயனருக்கு DM நோட்டிஃபிகேஷன் செல்லாது. வழக்கமான இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை போன்று பிரைவேட் ஸ்டோரி லைக் அம்சத்தில் எண்ணிக்கை எதுவும் காண்பிக்காது. இது DM திரெடிற்கு மாற்றாக வியூவர் ஷீட்டில் காண்பிக்கும். மெசேஜிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மெசேஜிங்கில், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் கண்ட்ரோல்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த இன்ஸ்டாகிராம் முடிவு செய்துள்ளது. முன்னதாக போஸ்ட், கமெண்ட் மற்றும் இதர ஆக்டிவிட்டி நீக்குவதை எளிமையாக்கும் அம்சம் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டது.