ரிலையன்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையை வழங்க புதிய நிறுவனத்தை துவங்கி இருக்கிறது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் எஸ்.இ.எஸ். நிறுவனங்கள் இணைந்து புதிதாக ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி லலிமிடெட் எனும் நிறுவனத்தை துவங்கி இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் கீழ் அடுத்த தலைமுறை பிராட்பேண்ட் சேவைகளை இந்தியாவில் குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
ஃபைபர் சார்ந்த கனெக்டிவிட்டியை வளர்க்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், 5ஜி மற்றும் FTTH வியாபாரங்களிலும் முதலீடு செய்து வருகிறோம். எஸ்.இ.எஸ். நிறுவனத்துடனான கூட்டணி மூலம் மல்டி-ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவையை வளர்க்க முடியும். செயற்கைக்கோள் மூலம் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளிலும் இணைய சேவைகளை வழங்க முடியும் என்பதால், அங்குள்ள கிராமங்கள், நிறுவனங்கள், அரசு துறை மற்றும் பயனர்களை டிஜிட்டல் இந்தியாவுடன் இணைக்க முடியும்.
எஸ்.இ.எஸ். அதிகபட்சம் 100Gbps திறன் வழங்கி ஜியோவின் பிரபலத்தன்மையை பயன்படுத்தி இந்தியாவில் வியாபாரத்தை வளர்க்கும். கூட்டு வியாபார திட்டத்தின் கீழ் இந்திய உள்கட்டமைப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் முடியும். இந்த கூட்டணி எஸ்.இ.எஸ். நிறுவனத்தின் செயற்கைக்கோள் டேட்டா மற்றும் கனெக்டிவிட்டியை இந்தியாவுக்கு வழங்க பாலமாக இருக்கும்.
முன்னதாக இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் கூட்டணி அமைத்து 5ஜி சோதனையை நடத்தும் பணிகளை ஜியோ தீவிரப்படுத்தி வருகிறது.