ஜியோவுக்கு போட்டியாக ஐடியா செல்லுலார் அதன் பிரதான மாஸ்டர் பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது அதிவேக கம்பி இணைப்பு பிராட்பேண்ட் சேவைகளை ஐடியா செல்லுலார் வழங்க தொடங்கியுள்ளது.
இன்டர்நெட் சேவையை பெருமளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் 2016 ஆண்டு இறுதியில் ஜியோ வெளியிட்ட பல அதிரடி சலுகையை அறிவித்தது.
ஜியோ அறிமுகம் செய்ய தொடங்கிய இலவச சேவையானது மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜியோவிற்கு எதிராக கடும் போட்டியை சமாளிக்க நேரிட்டது.
ஆரம்ப கால கட்டத்தில் ஜியோ இலவசமாக சேவையை வழங்கினாலும்,தற்போது கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.
ஜியோ நிர்ணயித்த கட்டணத்திற்கு நிகராக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
இதில் முற்றிலும் அடிப்பட்டு போன ஐடியா புது திட்டங்களின் மூலம் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதாவது, ஜியோவுக்கு போட்டியாக ஐடியா செல்லுலார் அதன் பிரதான மாஸ்டர் பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது அதிவேக கம்பி இணைப்பு பிராட்பேண்ட் சேவைகளை ஐடியா செல்லுலார் வழங்க தொடங்கியுள்ளது.
ஐடியா பிராட்பேண்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது ஹோம் பிராட்பேண்ட் மற்றும் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபைபர் பிராட்பேண்ட் ஆகிய இரண்டு திட்டங்களையும் வழங்குகிறது.
ஹோம் பிராண்ட் திட்டம் ரூ. 449 ல் தொடங்கி ரூ. 949 வரை நீடிக்கிறது. இந்த திட்டங்கள் மொத்தம் 600 ஜிபி அளவிலான டேட்டா வரம்பை கொண்டுள்ளது.ஐடியாவின் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமானது ரூ.699/-ல் தொடங்கி மிக விலை உயர்ந்த திட்டமான ரூ.2,499/- வரை நீள்கிறது. இந்த திட்டங்களானது 500ஜிபி அளவிலான டேட்டா வரம்பை கொண்டுள்ளது.
இதர ஐந்து திட்டங்களான ரூ.549, ரூ.649, ரூ.749, ரூ.849 மற்றும் ரூ.949/- ஆகியவைகள் முறையே 50ஜிபி, 100ஜிபி, 200ஜிபி, 400ஜிபி மற்றும் 600ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றன.
பட்டியலில் அடுத்தடுத்து, ரூ.1,999, ரூ.1,299, ரூ.1,499, ரூ.1,799 மற்றும் ரூ.2,099/- உள்ளது. இந்த ஐந்து திட்டங்களும் முறையே 120ஜிபி, 175ஜிபி, 225ஜிபி, 300ஜிபி மற்றும் 400ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்