ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 70 நாட்கள் வேலிடிட்டியை 84 நாட்களாக மாற்றி கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டி ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு நிறுவனமும் புதிய திட்டங்களையும், பழைய திட்டங்களில் கூடுதல் சலுகைகளை அறிவித்து வருகின்றன.
ஜியோவின் ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜியோவின் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டு தினசரி டேட்டா அளவு கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 399 திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்ட வழங்கப்பட்டு வருகின்றது. இதன் வேலிடிட்டி 70 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ. 399 க்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது புதிய மாற்றத்தின் மூலம் ஏர்டெல் ரூ.399 திட்டத்தில் 84 ஜிபி டேட்டா, தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் 1 ஜிபி டேட்டா 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களில் பயன்படுத்த முடியும்.
இந்த திட்டம் ஜியோவின் திட்டத்திற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ஏர்டெல் ரூ.399 திட்டம் மட்டுமின்றி ஏர்டெல் ரூ.149 திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ரூ.149 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
எனினும் இந்த திட்டம் முதற்கட்டமாக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.