ஐபிஎம் நிறுவனத்தில் 7800 பேருக்கு ஆப்பு.? இனி AIதான் வேலை செய்யும் - ஐபிஎம் சிஇஓ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

By Raghupati R  |  First Published May 3, 2023, 4:27 PM IST

ஐபிஎம் நிறுவனத்தில் 7800 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், ஊழியர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் (IBM) வரும் ஆண்டுகளில் நிறுவனத்தில் வேலை செய்பவர்களை நிறுத்திவிட்டு, செயற்கை நுண்ணறிவுடன் மாற்ற உள்ளோம் என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ப்ளூம்பெர்க் (Bloomberg) அறிக்கையின்படி, IBM CEO அரவிந்த் கிருஷ்ணா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI மூலம் சில பின்-அலுவலக செயல்பாடுகளை மாற்றலாம் என்று பரிந்துரைத்தார். அரவிந்த் கிருஷ்ணா மனித வளத்தை AI மூலம் மாற்ற முடியும் என்று கூறுகிறார். அமேசான் உட்பட பல நிறுவனங்கள் மனிதவளத் துறையிலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அதற்குப் பதிலாக AI ஐப் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்.

Latest Videos

undefined

இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

IBM நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செலவினங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தது. ஜனவரி மாதம் நிறுவனம் கிட்டத்தட்ட 4,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தது. ஐபிஎம் சிஇஓவும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான அரவிந்த் கிருஷ்ணா அளித்த பேட்டியில், "ஐந்தாண்டு காலத்தில் 30 சதவிகிதம் AI மற்றும் ஆட்டோமேஷனால் மாற்றப்படுவதை என்னால் எளிதாக பார்க்க முடிந்தது” என்றார்.

ஐபிஎம்மில் சுமார் 26,000 தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7,800 வேலைகள் AI மூலம் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. IBM இன் தலைமை நிதி அதிகாரி ஜேம்ஸ் கவனாக் கூறுகையில், புதிய உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் படிகள் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆண்டுக்கு $2 பில்லியன் சேமிப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான், கூகுள் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஐபிஎம் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்

click me!