ஆன்லைனில் இலவசமாக ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?

By Asianet Tamil  |  First Published Mar 16, 2023, 10:16 PM IST

இலவச ஆதார் அப்டேட் சேவை myAadhaar போர்ட்டலில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் UIDAI தெரிவித்துள்ளது. 


கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் சுமார் 1,200 அரசு திட்டங்கள், சேவைகளை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை உதவுகிறது.  

இந்த நிலையில், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யும் வசதி கொண்டு வரப்பப்ட்டுள்ளது. இந்த இலவச சேவை அடுத்த மூன்று மாதங்களுக்கு (ஜூன் 14 வரை) கிடைக்கும், அதே சமயம் தபால் நிலையங்கள், இசேவை மையங்களில் ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டுமென்றால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். 

Latest Videos

undefined

இது தொடர்பாக ஆதார் ஆணையம் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள்தொகை விவரங்களை மறுபரிசீலனை செய்வதற்காக மக்கள் தங்களது ஆதாரை புதுப்பிக்கும்படி பரிந்துரைக்கிறது. ஆதார் புதுப்பிப்புக்கு அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (PoI/PoA) ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

Poco X5 5G இந்தியாவில் அறிமுகம்! நம்பி வாங்கலாமா?

குறிப்பாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பெற்றவர்கள், தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்கள் மாறியிருந்தால், புதிய முகவரியை புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதை myAadhaar தளத்தில் சென்று புதுப்பிக்கலாம். இந்த தளத்தைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிமையானது. 

மேலும் பயனர்கள் தங்கள் போன் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். ஏற்கெனவே இணைத்துள்ளவர்கள், தங்கள் ஆதார் எண் எண்டர் செய்து உள்நுழையலாம், அதன்பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும். அதையும் உள்ளிட்டு தேவையான மாற்றங்களை செய்யலாம்.

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?

UIDAI ஆதார் தளத்திற்குச் செல்ல வேண்டும்: https://myaadhaar.uidai.gov.in/  இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள 'My Aadhaar' என்பதைக்  கிளிக் செய்யவும்.

இப்போது, ‘Update Your Aadhaar' பிரிவின் கீழ், 'Update Address in Your Aadhaar' என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை உள்ளிட்டு சரிபார்க்கவும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். UIDAI அமைப்பில் உள்நுழைய OTP ஐ உள்ளிடவும்.

உள்நுழைவு செயல்முறைக்குப் பிறகு, UIDAI இணையதளத்தின் ஆதார் அட்டை முகவரி மாற்றம் டாஷ்போர்டைக் காண்பீர்கள். ூUpdate Aadhaar Online' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது 'ஆதார் தரவு புதுப்பித்தல்' என்பதன் கீழ் Address என்பதைத் தேர்ந்தெடுத்து முகவரியை புதுப்பிக்கலாம்.

ChatGPT 4 இலவசமாக வேண்டுமா? ரொம்ப ஈஸி தான்!

click me!