தொலைந்துபோன செல் போன்.. ஈஸியா நாமே கண்டு பிடிக்கலாம் தெரியுமா? லாக் கூட செய்யலாம் - ஆனால் எப்படி? முழு விவரம்!

By Ansgar R  |  First Published Feb 20, 2024, 7:47 PM IST

How to find lost cell phone : தொலைந்துபோன செல் போனை, உடனடியாக கண்டுபிடித்து, அதை லாக் செய்யும் முறை எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.


மக்கள் தங்கள் செல்போன் தவற விட்டால், பதறாமல் இருந்த இடத்திலிருந்தே அதை கண்டுபிடித்து விடலாம்.
அதுமட்டும் இல்லாமல், அந்த செல் போனில் உள்ள நல்ல சொந்த தகவல்கள், புகைப்படங்கள் பற்றி கவலைப்பட வேண்டும். சரி இதெல்லாம் எப்படி சத்தியம் என்பதை பின்வருமாறு நாம் காணலாம். பின்வரும் தகவல் தமிழக காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி மூலம் அளிக்கப்பட்ட தகவலாகும்.
 
Find my device

Find my device மேற்குறிய விஷயங்களை நம்மால் எளிதாக செய்துவிட முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள். பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை  log in செய்ய வேண்டும். உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும். அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

Tap to resize

Latest Videos

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது  map மூலமாக தெரியவரும். மேலும் play sound கிளிக் செய்தால் செல்போன் 5 நிமிடம் வரை ஒலி எழுப்பும் . lock ஆப்சனை கிளிக் செய்தால் செல்போன் லாக் ஆகி விடும். அதே போல erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே அது பயன்படும். அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த  இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்க அது நமக்கு வாய்ப்பளிக்கும்.

இந்த தகவல்களை கொடுத்தது
கே. விஸ்வநாதன்.
சென்னை மாநகர போலீஸ்.

click me!