
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை. அழைப்புகளைப் பேசுவதிலிருந்து, இன்டர்நெட், பேங்கிங் சேவைகள், என்டர்டெயின்மென்ட் என அனைத்துக்கும் செல்போனையே மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். இதனால் மொபைல் பேட்டரி மற்றும் சார்ஜிங் சார்ந்த விஷயங்களில் செய்யப்படும் சிறிய தவறுகூட பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். குறிப்பாக, சார்ஜ் செய்த பிறகு செல்போனைக் கழற்றும்போது செய்யப்படும் ஒரு பொதுவான தவறைக் குறித்துப் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை.
பலர் செல்போனின் சார்ஜரைப் பிரிக்கும்போது, அதன் கேபிளைப் பிடித்து வேகமாக இழுப்பார்கள். இவ்வாறு செய்வது தவறான முறை ஆகும். கேபிளை இழுக்கும்போது, அதன் உட்பகுதியில் உள்ள சிறிய கம்பிகள் மற்றும் கனெக்டர் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக இவ்வாறு செய்யும்போது சார்ஜிங் கேபிள் விரைவில் பழுதாகிவிடும்; செல்போனிலும் சார்ஜிங் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கும்.
ChatGPT-ல் இதையெல்லாம் தேடுவீங்களா? போலீஸ் உங்க வீட்டு கதவை தட்டும்.. உஷார் மக்களே!
சார்ஜிங் கேபிளைக் கழற்றும்போது அதன் கேபிளைப் பிடித்து இழுக்காமல், செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் பகுதியை விரல்களால் பிடித்து மெதுவாக வெளியே எடுக்க வேண்டும். இதனால் கேபிளின் மீதான அழுத்தம் குறைந்து, அது நீண்ட காலம் உழைக்கும். ஒருவேளை கேபிள் சேதமடைந்திருந்தாலோ அல்லது பிளந்திருந்தாலோ அதைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரியானதல்ல. அவ்வாறு சேதமடைந்த கேபிள்கள், சார்ஜிங் செய்யும்போது செல்போனையும் சார்ஜரையும் அதிக அளவில் சூடாக்கிவிடும். எனவே, கேபிள் சேதமடைந்திருந்தால் உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும்.
சுவிட்ச் போர்டில் கவனம் தேவை
செல்போனிலிருந்து கேபிளைக் கழற்றும்போது மட்டுமன்றி, சுவிட்ச் போர்டு அல்லது வால் சாக்கெட்டிலிருந்து சார்ஜரை எடுக்கும்போதும் இதே தவறு செய்யப்படுகிறது. அங்கேயும் கேபிளைப் பிடித்து இழுக்காமல், சார்ஜர் அடாப்டரைக் கையால் பிடித்துதான் சாக்கெட்டிலிருந்து எடுக்க வேண்டும்.
சார்ஜிங் கேபிளைச் சரியாகக் கையாண்டாலே செல்போனின் சார்ஜிங் போர்ட் பாதுகாப்பாக இருக்கும். செல்போன் அதிகமாகச் சூடாகாமல் பார்த்துக்கொள்வது, சேதமடைந்த சார்ஜர் அல்லது கேபிளைப் பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றின் மூலம் பேட்டரியின் ஆயுளையும் நீட்டிக்க முடியும்.
0% வரை பேட்டரியைக் குறைக்காதீர்கள்
பேட்டரி முற்றிலும் தீர்ந்து (0%) போன் சுவிட்ச் ஆஃப் ஆகும் வரை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் எப்போதும் 100% சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. பேட்டரி அளவு 20% முதல் 80% வரை இருக்குமாறு பார்த்துக்கொள்வது பேட்டரியின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கும்.
இரவு முழுதும் சார்ஜரில் போடாதீர்கள்: போனை இரவு முழுவதும் சார்ஜரில் வைத்திருந்தால் பேட்டரி தொடர்ந்து அபாய நிலைக்குச் சென்று சூடாகும். இது நீண்ட காலத்தில் பேட்டரி திறனைக் குறைக்கும்.
போன் கவருடன் சார்ஜ் செய்யாதீர்கள்: சார்ஜ் ஆகும்போது போனில் இருந்து சிறிதளவு வெப்பம் வெளியேறும். தடிமனான போன் கவர் அந்த வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கும். எனவே சார்ஜ் செய்யும்போது கவரைக் கழற்றி வைப்பது நல்லது.
Fridge Cooling Problem: ஃப்ரிட்ஜ் கூலிங் குறையுதா? இந்த சின்ன தப்புதான் காரணம் – உடனே சரி பண்ணுங்க!
போலி சார்ஜர்கள் வேண்டாம்
ஒரிஜினல் / சான்றளிக்கப்பட்ட சார்ஜர்கள்: போன் நிறுவனத்தின் ஒரிஜினல் சார்ஜர் அல்லது சான்றளிக்கப்பட்ட பிராண்டட் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போலி சார்ஜர்கள் போனுக்குச் செல்லும் மின்சாரத்தின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் பேட்டரியைப் பாழாக்கிவிடும்.
சார்ஜ் ஆகும்போது போனைப் பயன்படுத்தாதீர்கள்: சார்ஜ் ஏறும்போது கேம்கள் விளையாடுவதோ அல்லது வீடியோக்கள் பார்ப்பதோ பேட்டரிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இது போனை இருமடங்கு சூடாக்கி, பேட்டரி வீங்குவதற்கோ அல்லது சேதமடைவதற்கோ வழிவகுக்கும்.
சூடான இடங்களில் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்: நேரடியாக வெயில் படும் இடங்களிலோ, தலையணை அல்லது மெத்தையின் அடியிலோ போனை வைத்து சார்ஜ் செய்யக்கூடாது. குளிர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைத்து சார்ஜ் செய்வதே பாதுகாப்பானது.
மொபைலை 24 மணி நேரமும் பயன்படுத்தினால் மட்டும் போதாது. மொபைலை எப்படி சார்ஜ் செய்ய வேண்டும்? அதில் என்னென்ன தவறு செய்யக்கூடாது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.