
ஸ்மார்ட்போன் உலகில் ஒரு புதிய புரட்சி வெடிக்கப் போகிறது. சீனாவின் முன்னணி நிறுவனமான Honor, தனது அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. வரும் மார்ச் 1, 2026 அன்று பார்சிலோனாவில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC 2026), உலகம் இதுவரை பார்த்திராத இரண்டு அதிரடி சாதனங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அவை - ‘Honor Magic V6’ என்ற ஃபோல்டபிள் போன் மற்றும் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் ‘Honor Robot Phone’.
இந்த நிகழ்வின் மிகப்பெரிய எதிர்பார்ப்பே ‘Honor Robot Phone’ தான். இது சாதாரண ஸ்மார்ட்போன் போல இல்லாமல், ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோவாகவே செயல்படும். இதில் உள்ள கேமரா ஒரு கிம்பல் (Gimbal) உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கேமரா தானாகவே வெளியே வந்து, நகரும் பொருட்களைத் துல்லியமாகப் படம்பிடிக்கும். அதுமட்டுமின்றி, பயனரின் குரல் கட்டளைக்கு ஏற்ப சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பதில் சொல்லும் திறன் கொண்டது.
அடுத்ததாகக் களமிறங்குவது Honor Magic V6. இது அந்நிறுவனத்தின் முந்தைய ஃபோல்டபிள் போன்களை விடப் பல மடங்கு சக்திவாய்ந்ததாக இருக்கும். இதில் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போல்டபிள் போன்களிலேயே மிகப்பெரிய பேட்டரியாக 7000mAh திறனுடன் இது வெளிவரலாம். 200MP பிரதான கேமராவுடன் வரும் இந்த போன், புகைப்படம் எடுப்பதில் டிஎஸ்எல்ஆர் (DSLR) கேமராக்களுக்கே சவால் விடும்.
இந்த வெளியீட்டு நிகழ்வுக்கு ‘AI Device Ecosystem Era’ என்று Honor பெயரிட்டுள்ளது. அதாவது, வெறும் கருவிகளாக இல்லாமல், மனிதர்களுடன் உரையாடும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட சாதனங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். உதாரணமாக, உங்கள் ஆடைக்கு ஏற்ற காலணிகளைத் தேர்வு செய்வது முதல், செல்லப்பிராணிகளின் வகைகளைக் கண்டறிவது வரை அனைத்தையும் இந்த போன்களே செய்துவிடும்.
மார்ச் 1-ம் தேதி அறிமுகமானாலும், இதன் விற்பனை மற்றும் விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இது ஒரு நேரடி சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.