புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பேஷன் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் டிரம் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 74 ஆயிரத்து 590, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 78 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்கள்:
புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் மாடலில் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் படி இந்த மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், முழுமையான டிஜிடில் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் அலெர்ட் வசதி கிடைக்கிறது. இத்துடன் ரியல்டைம் மைலேஜ் இண்டிகேட்டர், லோ-பியூவல் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட் ஆப், சர்வீஸ் ரிமைண்டர் போன்ற வசதிகளும் உள்ளன.
இத்தனை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையிலும், எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அம்சம் புதிய பேஷன் எக்ஸ்டெக் மாடலில் வழங்கப்படவில்லை. புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் மாடலிலும் 110 சிசி, சிங்கில் சிலிண்டர் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
என்ஜின் விவரங்கள்:
இந்த என்ஜின் 9 ஹெச்.பி. பவர், 9.79 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் புதிய பேஷன் எக்ஸ்டெக் மாடலில் i3S தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மோட்டார்சைக்கிளின் மைலேஜை அதிகப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
புதிய பேஷன் மட்டும் இன்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்பிலெண்டர் பிளஸ், கிளாமர் 125, பிளஷர் பிளஸ் 110 மற்றும் டெஸ்டினி 125 போன்ற வாகனங்களின் எக்ஸ்டெக் வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் இவற்றின் விற்பனையும் துவங்கி நடைபெற்று வருகிறது.