ரூ. 4.99 லட்சம் விலையில் புது பைக் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா..?

By Kevin Kaarki  |  First Published Jun 25, 2022, 4:02 PM IST

புதிய 2023 கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிளில் 399சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.


கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 400சிசி மோட்டார்சைக்கிள் இம்முறை யூரோ 5/பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

2023 கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் நின்ஜா 300 மாடலுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கவாசகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் அனுபவம் இல்லாத அல்லது ரைடிங்கை ஆரம்பிக்கும் பயனர்களுக்கான மாடல் ஆகும். புதிய 2023 கவாசகி நின்ஜா 400 மாடல் அனுபவம் மிக்க ரைடர்களுக்காக உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். புதிய லைம் கிரீன் KRT எடிஷன் ஆகும். 

Latest Videos

undefined

என்ஜின் விவரங்கள்:

இந்த மாடலில் லைம் கிரீன் பேஸ் நிறமாகவும், பிளாக் நிற கிராபிக்ஸ் மற்றும் ரெட் ஹைலைட்கள் உள்ளன. ஸ்டைலிங்கில் ரேஸ் சார்ந்த கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 2023 கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிளில் 399சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த யூனிட் தற்போது பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

செயல்திறனை பொருத்தவரை இந்த என்ஜின் 44 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 2023 கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் மாடலில் மேம்பட்ட ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக முன்பை விட 20 சதவீதம் இலகுவான லீவர் ஆக்‌ஷன் இருக்கும் என கவசாகி தெரிவித்து உள்ளது. 

மெக்கானிக்கல் பாகங்கள்:

மற்ற மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 41 மில்லிமீட்டர் கயாபா டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் பிரீ-லோடு செய்யப்பட்ட அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 286 மில்லிமீட்டர் செமி புளோட்டிங் பெட்டல் முன்புற டிஸ்க், பின்புறம் 193 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் 110/70 டையர், பின்புறத்தில் 150/60 டையர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ட்வின் பாட் ஹெட்லேம்ப், ஃபேரிங் மவுண்ட் செய்யப்பட்ட ரியர் வியூ மிரர்கள், 14 லிட்டர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது. 

click me!