Hero offer : ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் வரையிலான சிறப்பு பலன்களை வழங்குகிறது. இவை மகளிர் தின கொண்டாட்டத்தின் அங்கமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரையிலான கேஷ் போனஸ் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் / லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஹீரோ டெஸ்டினி 125 மாடலை வாங்குவோருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை மகளிர் தின கொண்டாட்டத்தின் பேரில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், பெண் வாடிக்கையாளர்கள் மார்ச் 11 ஆம் தேதி வரை மட்டும் இந்த சலுகையின் மூலம் பயன்பெற முடியும். சிறப்பு மகளிர் தின சலுகை நாட்டின் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிளெஷர் பிளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 110, டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 போன்ற ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஹீரோ பிளெஷர் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 62,220 என துவங்குகிறது. மேஸ்ட்ரோ எட்ஜ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 82,320 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிளெஷர் பிளஸ் மற்றும் டெஸ்டினி 125 போன்ற மாடல்கள் எளிய பயன்பாடுகளுக்கானவை ஆகும். டெஸ்டினி சீரிஸ் அதிநவீன டிசைன் மற்றும் ஸ்போர்ட் டுவிஸ்ட் கொண்ட மாடல்கள் ஆகும். இவை இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து வெளியிடப்பட்டு உள்ளன.