வேற லெவல் அம்சங்கள்- ஆப்பிள் மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்ப்ளே அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 9, 2022, 8:48 AM IST

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.  


ஆப்பிள் நிறுவனம் M1 அல்ட்ரா சிப்செட் அறிமுகம் செய்த கையோடு புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆப்பிள் கம்ப்யூட்டர் மேக் ஸ்டூடியோ என அழைக்கப்படுகிறது. இந்த கம்ப்யூட்டரில் புதிய அலுமினியம் என்க்ளோஷர், உயர் ரக அம்சங்கள், ஏராளமான போர்ட்கள் உள்ளன. 

புதிய மேக் ஸ்டூடியோ கம்ப்யூட்டருடன் ஸ்டூடியோ டிஸ்ப்ளே சாதனத்தையும் ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு 27 இன்த் 5K ரெட்டினா மாணிட்டர் ஆகும். இதில் ஏ13 பயோனிக் சிப்செட், பில்ட்-இன் கேமரா, மைக்ரோபோன் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. 

Tap to resize

Latest Videos

undefined

ஆப்பிள் மேக் ஸ்டூடியோ M1 மேக்ஸ் அல்லது முற்றிலும் புதிய M1 அல்ட்ரா சிப்செட் மற்றும் 64GB அல்லது 128GB யுனிஃபைடு மெமரி கொண்டு கான்ஃபிகர் செய்து கொள்ளலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என்பதால் மேக் ஸ்டூடியோ மாடலில் 2 யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள், SDXC கார்டு ஸ்லாட், 4 தண்டர்போல்ட் 4 போர்ட்கள், 10Gb ஈத்தர்நெட் போர்ட், இரண்டு யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட்கள், HDMI போர்ட், ப்ரோ ஆடியோ ஜாக் என ஏராளமான போர்ட்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் வைபை 6 மற்றும் ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேக் ஸ்டூடியோ மாடலுடன் நான்கு ப்ரோ டிஸ்ப்ளே XDR, 4K டி.வி. உள்ளிட்டவைகளுடன் பயன்படுத்தலாம். மேக் ஸ்டூடியோ மாடலில் முற்றிலும் புது வடிவமைப்பு கொண்ட அலுமினியம் என்க்ளோஷர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது  7.7 x 7.7 x 3.7 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் ஃபேன் கூலிங் சிஸ்டம் உள்ளது. 

புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டருடன் அறிமுகம் செய்யப்பட்ட மாணிட்டர் ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாணிட்டர் 27 இன்ச் 5K ரெட்டினா பேனல், 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் DCI P3 கலர் கமுட் உள்ளது. இந்த டிஸ்ப்ளே Anti-reflective கோட்டிங் அல்லது nano-texture glass ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி கொண்டிருக்கிறது. 

ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடலும் ஆல்-அலுமினியம் என்க்ளோஷர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாணிட்டர் மெல்லிய பெசல்கள், பில்ட் இன் ஸ்டாண்டடு, 30 டிகிரி டில்ட் வசதி கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவினுள் ஏ13 பயோனிக் சிப், பில்ட் இன் 12 MP அல்ட்ரா வைடு கேமரா, மூன்று மைக்ரோபோன் அரே மற்றும் ஹை-ஃபிடிலிட்டி 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் மூன்று யு.எஸ்.பி. டைப் சி போர்ட், தண்டர்போல்ட் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

மேக் ஸ்டூடியோ மற்றும் ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் விற்பனை மார்ச் 18 ஆம் தேதி துவங்குகிறது. புதிய மேக் ஸ்டூடியோ இந்திய விலை ரூ. 1,89,900 என துவங்குகிறது. ஸ்டூடியோ டிஸ்ப்ளே விலை ரூ. 1,59,900 என துவங்குகிறது. இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் மேஜிக் கீபோர்டு மாடலை புதிய நிறங்களிலும், புதிய மேஜிக் டிராக்பேட் மற்றும் மேஜிக் மவுஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் டச் ஐ.டி. மற்றும் கீபேட் கொண்ட மேஜிக் கீபோர்டு விலை ரூ. 19,500 என்றும் புதிய மேஜிக் டிராக்பேட் விலை ரூ. 14,500 என்றும் மேஜிக் மவுஸ் விலை ரூ. 9,500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

click me!