iPhone 13 : ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ‘peek performance’ நிகழ்வில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை கிரீன் நிறத்திலும், ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களை ஆல்பைன் கிரீன் நிறத்திலும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நிறம் தவிர ஐபோன் 13 சீரிஸ் மாடல் பின்க், புளூ, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் கிராஃபைட், கோல்டு, சில்வர் மற்றும் சியெரா புளூ நிறங்களில் கிடைக்கிறது.
ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உள்ள ஆல்பைன் கிரீன் பல்வேறு லேயர்களால் ஆன நானோமீட்டர் ஸ்கேல் மெட்டாலிக் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்கள் சர்ஜிக்கல் கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட மேட் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களில் எலிகண்ட் கலர்-மேட்ச்டு அலுமினியம் ஃபிரேம் மற்றும் பிரெசிஷன்-மில்டு கிளாஸ் பேக் உள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய நிறத்தில் கிடைக்கும் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 69,900, ரூ. 79,900, ரூ. 1,19,900 மற்றும் ரூ. 1,29,900 என துவங்குகின்றன. ஆல்பைன் கிரீன் நிற ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 சீரிஸ் கிரீன் நிற மாடலுக்கான முன்பதிவு மார்ச் 11 ஆம் தேதியும், விற்பனை மார்ச் 18 ஆம் தேதியும் தொடங்குகிறது.