5ஜி கனெக்டிவிட்டி, அசத்தல் அப்டேட்களுடன் ஐபேட் ஏர் 5th Gen அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 9, 2022, 5:57 AM IST

5ஜி வசதி கொண்ட புதிய ஐபேட் ஏர் 5th Gen மாடல் இந்திய விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.


ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் ஏர் 5th Gen மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ஏர் மாடல் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, டச் ஐ.டி. சென்சார், ஆப்பிள் M1 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் ஏ14 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது புதிய ஐபேட் ஏர் மாடலில் 5ஜி வசதி கொண்ட பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐபேட் ஏர் 5th Gen மாடலில் 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் கொண்ட பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், லேண்ட்ஸ்கேப் மோட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், வைபை 6 வசதி வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஆப்பிள் ஐபேட் ஏர் 5th Gen அம்சங்கள் 

- 10.9 இன்ச் 2360x1640 பிக்சல் ரெட்டினா ட்ரூ டோன் டிஸ்ப்ளே
- ஆப்பிள் M1 சிப்செட்
- 8-கோர் GPU, 16-கோர் நியூரல் என்ஜின்
- 64GB/256GB மெமரி வேரியண்ட்கள்
- ஐபேட் ஓ.எஸ். 15
- 12MP கேமரா, f/1.8, 5P லென்ஸ், ஸ்மார்ட் HDR 3
- 12MP அல்ட்ரா வைடு ட்ரூ டெப்த் கேமரா, f/2.4
- டூயல் மைக்ரோபோன்
- 5ஜி (ஆப்ஷனல்), வைபை 802.11 ax வைபை 6, ப்ளூடூத் 5.0
- டச் ஐ.டி. 
- 28.6-வாட் ஹவர் ரீ-சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பாலிமர் பேட்டரி

விலை விவரங்கள் 

ஐபேட் ஏர் 5th Gen வைபை 64GB ரூ. 54,900
ஐபேட் ஏர் 5th Gen வைபை 256GB ரூ. 68,900
ஐபேட் ஏர் 5th Gen வைபை + செல்லுலார் 64GB ரூ. 68,900
ஐபேட் ஏர் 5th Gen வைபை + செல்லுலார் 256GB ரூ. 82,900
ஆப்பிள் பென்சில் 2nd Gen  ரூ. 10,900
புதிய ஐபேட் ஏர் மாடலுக்கான மேஜிக் கீபோர்டு ரூ. 27,900
புதிய ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு ரூ. 15,900
புதிய ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் ஃபோலியோ ரூ. 7,500

ஐபேட் ஏர் 5th Gen மாடல் ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட், பின்க், பர்ப்பில் மற்றும் புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ஏர் 5th Gen மாடலுக்கான முன்பதிவு இந்தியா உள்பட உலகின் 29 நாடுகளில் மார்ச் 11 ஆம் தேதியும், விற்பனை மார்ச் 18 ஆம் தேதியும் தொடங்குகிறது.   

tags
click me!